இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு தற்காலிக அமைதி காசாவிற்கு திரும்பியிருக்கிறது.
இந்தச் சண்டை நடந்த விதத்தில் இருந்த நீண்டகால அரசியலை விட்டுவிடுவோம். அதை அலச அறிஞர்கள் இருக்கிறார்கள்.
இருபது இலட்சம் அப்பாவி காசா மக்கள் அடைந்த துயருக்கு அளவேயில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற அடிப்படை உரிமைகளுமே இல்லாமல் வாடினார்கள். இதோடு மருத்துவ வசதியும் இல்லாமல் தவித்தார்கள். கடந்த இரண்டு நாட்களாகத் தான் இந்த நான்கில் மூன்று மீண்டும் ஓரளவு உள்ளே வரத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. அமைப்பு நிவாரணங்களை அதிகரிக்க நம் எல்லோரிடமும் பண உதவிக் கேட்கிறார்கள். என்னால் முடிந்ததை அவர்கள் இணையத்தளம் மூலம் கொடுத்துள்ளேன். உங்களால் இயன்றதை நீங்களும் கொடுத்து உதவக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

