மைக்ரோசாப்ட் 365 கோ-பைலட் பிரோ சந்தா சேவையைப் பயன்படுத்தி இந்தத் தமிழ் வீடியோவை இரண்டு நிமிடங்களில் உருவாக்கியிருக்கிறேன். நான் கொடுத்த பிராம்ப்ட் கீழே இறுதியில்.
இதில் வரும் கருத்து, வரிகள், தமிழ் ஒலி, ஒளி என எல்லாமே செய்யறிவு தானாகவே உருவாக்கியது. நான் மாற்றியது, அதாவது வீடியோ எடிட்டிங் செயலியில் பட்டிப்பார்த்தது மூலக் கட்டுரையின் திரையை இரண்டு இடங்களில் ஒட்டியது. அது மட்டுமே.
இதில் பேசப்பட்டுள்ளது இன்று இயற்றலறிவு இந்தளவு வளர்ந்திருக்கக் காரணமான முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை – கூகுள் ஆராய்ச்சியாளர்கள் 2017இல் வெளியிட்ட “அட்டென்ஷன் இஸ் ஆல் யூ நீடு” [Attention is all you need] என்ற செயற்கை நுண்ணறிவுக் கட்டுரை. இதைத் தான் காணொலியில் விளக்கச் சொல்லிக் கேட்டேன்.
இதே கட்டுரையைக் கூகுள் ஜெமினியின் ஸ்டோரிபுக்கில் முயன்றபோது கிடைத்தது நீங்கள் பார்க்கும் இரண்டாவது வீடியோ. தமிழில் வேண்டும் நான் என்று சொல்லவில்லை, அதனால் இது முழுக்க ஆங்கிலத்தில் வந்தது. இந்தக் கடினமான ஆராய்ச்சிக் கட்டுரையை எந்தளவு எளிதாக விளக்கியுள்ளது, பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
//Create an educational video in simple Tamil to introduce and highlight Google's 2017 "Attention is all you need" Paper by Ashish Vaswani and others. I am going to be using this in a video where I talk about the paper. Make it family-friendly in your visuals. //
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

