இன்று தான் ஜயிலர் பட ஒலி வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்களின் ஒரு மணி நேர உரையைக் கேட்டேன். அவரின் இந்தப் பேச்சை, படத்தைவிட, மிகவும் ரசித்தேன். இந்த இயல்பான, பாங்கான ரஜினியைக் கண்டு தான் 80களில் 90களில் என்னைப் போன்ற பலரும் அவரின் ரசிகர்களானோம்.

அவரின் முதல் மேடை நாடக அனுபவத்தைச் சொல்லும் பொது, அந்தத் துரியோதனனின் கதையை இந்த கையிலிருந்து அந்த கைக்கு, ஒலிவாங்கியை மாதிரியாக வைத்து, வீசுவது போலச் செய்தாரே, அந்த ஒரு பாங்கு (ஸ்டைல்) போதும், அபாரம். இப்படியான ஓர் அசைவு யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அந்த ஸ்டைலை ‘நாமே செய்வது போல உணர வைப்பது’ யாராலும் செய்ய முடியாது. அதற்குத் தேவை, மக்களை ஈர்க்கும் கவர்ச்சி, அப்படியான ஓர் ஈர்ப்பு இருந்தால் தான் முடியும், அது அவரிடம் அந்த மேடையிலும் பார்த்தேன், உணர்ந்தேன். ஆனால் அது அவரின் சமீபத்திய இரண்டு படங்களிலும் என்னால் உணர முடியவில்லை, அதற்கு காரணம் கதைகளின் தேர்வு.

அடுத்தது, குடிக்காமல் இருக்கவும் என்று அவரின் ஆழ் மனதிலிருந்து வந்த அனுபவ அறிவுரை. இன்று தமிழகத்தில் பிரபலங்கள், குறிப்பாக அரசியல் தலைவர்கள் யாரும் (சிலரைத் தவிர) பேசத் தயங்கும் விஷயத்தை அவர் பேசியதற்கு அவருக்கு மிகப் பெரிய நன்றி. இதன் தாக்கம் பெரியதாக இல்லாமல் போகலாம், ஆனால் இதை பார்த்து ஓரிருவர் திருந்தினாலும் அவரின் ரசிகர்களுக்கான பெருமை, மகிழ்ச்சி.

முக்கியமாக அரசியல் பேசாதது (காரணம் தெரியும்) நல்ல விஷயம், நன்றி.

வரும் காலங்களில் அவருக்கு ஏற்ற நல்ல கதைகளைத் தேர்வு செய்து மேலும் மேலும் பல படங்களை அவர் நடித்து நம்மை மகிழ்விப்பார் என நம்பும் அவரின் ரசிகன்.

#ரஜினி #Rajinikanth #jaileraudiolaunch

Categorized in:

Tagged in: