தங்களிடமிருக்கும் பழைய படங்கள், வீடியோக்களைப் பாதுகாப்பது எப்படி? எளிய பரிந்துரை. இன்றைக்கு (24 ஆகஸ்ட் 2022) வந்திருக்கும் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் என்னுடைய இந்த வாரக் கட்டுரை.

அழியக் கூடாத நினைவுகள்

அரண்மனை (2014) திரைப்படத்தில் பால்சாமியாக வரும் நடிகர் சந்தானத்தை நினைவிருக்கிறதா? அதில், பெரிய ஜமீன் சொத்துக்கு வாரிசு என நிரூபிக்க இருந்த ஒரே ஆதாரம் அவரது ஆயாவின் பழைய போட்டோ. அதில் ‘ஏதோ’பட்டு அழிந்துவிட அதைத் தேடி, பேய் மாளிகைக்கு வந்து படாத பாடு படுவார். இதுபோல உங்களுக்கு நடக்காமல் இருக்க நம்முடைய பெற்றோர், மூதாதையர்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களைப் பாதுகாப்பது அவசியம்.

போட்டோ ஸ்டுடியோ
பழங்காலத்துப் படங்கள் கணினியில் இருக்காது. காகிதமாக இருக்கும் அல்லது போட்டோ-நெகட்டிவ்களாக இருக்கும். இப்படி நம் வீட்டில் இருக்கும் பழைய போட்டோக்களை நாமே மொபைலில் படமெடுத்துக் கணினியில் சேமிக்கலாம். அதற்கு கூகிள் போட்டோ-ஸ்கேன் (Google Photoscan) என்ற சிறப்புச் செயலி இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால் இப்படி ஒவ்வொன்றாகச் செய்ய அதிக நேரம் பிடிக்கும்.

நெகட்டிவ்களை வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருக்கும் சில பிரிண்டர்-ஸ்கானர்களில் (Printer-Scanner) அதற்கான செயலிகளைக் கொண்டு படமாக மாற்றிக் கணினியில் (அல்லது மேகக்கணிமையில்) சேமிக்க முடியும். ஆனால் அதுவும் கடினமான காரியம். நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வேலைகளை நாம் வாழ்வில் சிலமுறைதான் செய்யப் போகிறோம், அதனால் கஷ்டப்பட்டுக் கற்பது வீண். என்ன செய்யலாம்?

தொடர்ந்து படிக்க.

#madraspaper

Categorized in:

Tagged in:

,