
1950களில் நடமாடும் புத்தக விற்பனை வண்டிகள்
இப்போது கொரோனா ஊரடங்கினால் காய்கறி, பழங்களோடு மளிகை சாமான்களும் வீட்டின் வாசலிலேயேக் கிடைக்கிறது. கூடிய விரைவில் செல்பேசிகளும், மடிக் கணினிகளும் கூடக் கிடைக்கலாம்!
இதையெல்லாம் எதிர்ப்பார்த்ததுப் போல், என் தாத்தா (லிப்கோ பதிப்பக நிறுவனர்) திரு கிருஷ்ணசாமி சர்மா அவர்கள் 1950களில் நடமாடும் புத்தக விற்பனை வண்டிகளைத் தொடங்கினார் – LIFCO Books on wheels. இந்த முயற்சியை, அப்போதைய சுதேசமித்திரன் (மகாகவி பாரதியார் இங்கே உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்) ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசன் மற்றும் இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராக இருந்த திரு ராஜாஜி அவர்களும் தொடங்கிவைத்தது எங்களுக்கு என்றென்றும் பெருமை.

தொடங்கிய சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடமாடும் கடைகள் வணிகரீதியாக இலாபமாகப் போகவில்லை, அதனால் சிறிய மூன்று சக்கர வண்டியைத் தவிர பெரிய கூடுந்துகள் (வேன்கள்) மூடப்பட்டதாக என் தந்தைச் சொல்லி எனக்கு நினைவு. மூன்று சக்கர வண்டியும் 1980களில் நிறுத்தப்பட்டது.



One Comment
Varadarajan R
சிரம் தாழ்த்தி வணக்கம்