
Sri Arulicheyal’s Divya Prabhanda Recital 2019
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் கிருபையால், கடந்த பத்தாண்டுகளாக அருளிச்செயல் கைங்கர்ய சபா என்ற திவ்யபிரபந்த அமைப்பு, ஏகதின திவ்யபிரபந்த பாராயண வைபவத்தை நடத்தி வருகிறது. இதில் பிரபந்த வித்வான்கள், ஆஸ்திகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஏகதின திவ்யபிரபந்த வைபவம் என்பது ஒரே நாளில் “தமிழ் மறை“, “திராவிட வேதம்” என்றெல்லாம் போற்றப்படும் நாலாயிர திவ்விய பிரபந்ததில் இருக்கும் நாலாயிரம் பாடல்களையும் பெருமாளுக்கு (ஸ்ரீ விஷ்ணுவிற்கு) பாடப்படுவது.
இன்று பதினோராவது ஆண்டு வைபவம் வெகு விமர்சையாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று மாலை, நீங்கள் சென்னை மேற்கு மாம்பலத்தில் இருந்தால், ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹர் அருளை பெற, ஏகதின திவ்ய பிரபந்த பாராயணத்தில் கலந்துக் கொள்ளலாம்.
இடம்: ஸ்ரீநாத் கல்யாண மண்டபம்.

காலையில் நான் சென்றப் போது எடுத்தப் படங்கள் கிழே:

