
Senseless parking in the footpath
சென்னை கே.கே.நகரில் ராமசாமி சாலை, மற்றும் லஷ்மணசாமி சாலைகளில் சில வருடங்களுக்கு முன்பாக அகலமான தனி நடைபாதை / மிதிவண்டி பாதை அமைத்து, அதற்குத் தடுப்பும் போட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. நல்ல முயற்சி.
இன்றைக்கு அந்த வழியாக மாலை நேர நடை போனேன்.
இன்றும் நடைபாதை முக்கால்வாசி இடங்களில் நன்றாகத் தானுள்ளது, ஆனால் மக்கள் முட்டாள்களாகச் சிலப்பல இடங்களில் (குறிப்பாகக் கடைகள்/உணவகங்கள்/மருத்துவமனைகள்) முன்பாகத் தங்களின் வாகனங்களை நடக்கக்கூட வழிவிடாமல் நிறுத்தியுள்ளார்கள். இதனால் நல்ல நடைபாதை இருந்தும் பஸ் போகும் சாலையில் இறங்கி நடக்க வேண்டியுள்ளது.
இந்த முட்டாள்களை எந்தச் சட்டம் போட்டோ, எவ்வளவு பணம் செலவு செய்து ஸ்மார்ட் சிட்டி (SMART CITY) வடிவமைத்தாலோ, ஓர் அடிக்கு ஒரு காவலரைப் போட்டாலோ கூட ஒன்றும் திருத்த முடியாது. இவர்களைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றுகிறது. கோபப்பட்டுப் பயனியில்லை!
#footpath #chennai #parking #chennaicorporation

