வாரத்தில் முதல் வேலை நாள், திங்கள் கிழமை காலையில் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம் என்றால், வங்கி காரர்கள் கடன் வேண்டுமா என்ற தொந்தரவு அழைப்புகள் தான் வருகிறது. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அழைப்பு பாருங்கள். இத்தனைக்கும் என் செல்பேசி எண்ணை நான் அவ்வளவாக வெளியில் கொடுப்பதில்லை.

ஸ்வீகி, அமேசான், பி. வி. ஆர். சினிமா போன்ற செயலிகளுக்கு, ரிலையன்ஸ், மளிகைக் கடைகளுக்கு என்று தனியாக ஓர் எண் வைத்துள்ளேன், அந்தச் செல்பேசியைத் தேவை என்கிற போது மட்டுமே ஒலி எழுப்பும் நிலையில் வைத்திருப்பேன். இருந்தும் என் முதன்மை செல்பேசி எண்ணுக்கு இவ்வளவு அழைப்புகள்.

நல்ல வேலை, ஐபோனில் இருக்கும் இந்த ஒரு வசதி என்னைக் காப்பாற்றுகிறது. தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுத்துவிடவும் என்கிற இந்த செட்டிங் தான் அது. இதை இயக்க, ஐபோனின் ஃபோன் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.

இந்த எளிய வசதி ஒரு வரப் பிரசாதம்!

இன்றைக்கு வந்த தொந்தரவு அழைப்புகள்

இன்றைக்கு வந்த தொந்தரவு அழைப்புகள்

தொந்தரவு அழைப்புகளிலிருந்து காப்பாற்றும் ஐபோன் வசதி

தொந்தரவு அழைப்புகளிலிருந்து காப்பாற்றும் ஐபோன் வசதி

பின் குறிப்பு: இதனால் சில சமயம் தெரியாத ஆனால் வேண்டிய அழைப்புகள் வந்தால், அதைத் தவற விடவரும். பரவாயில்லை. ஆனால், ஒருவேளை கூகுள் திரு சுந்தர் பிச்சையோ அல்லது மைக்ரோசாப்ட் திரு சத்ய நாடல்லாவோ என்னோடு நேரடியாகப் பேசி, யோசனை கேட்க வேண்டிவந்தால் என்ன செய்ய? அப்படியெல்லாம் அவர்கள் திடீரென்று அழைக்க மாட்டார்கள், அவர்களின் உதவியாளர்கள் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்-ஆப் செய்தி அனுப்பி, பின்னர் தான் அழைப்பார்கள். திரு சுந்தர் பிச்சை என்றால் அவரின் தமிழக விசிறி செல்வ முரளி மூலம் செய்தி அனுப்புவார். ஒரு குடியும் முழுகிவிடாது.

Categorized in:

Tagged in: