கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலுள்ள ஒரு சக்தி தி.மு.க.. 70களில் பிறந்த என் தலைமுறைக்கு தி.மு.க.வை அட்சியாளர்களாகவும் ஒரு அரசியல் கட்சியுமாகத் தான் தெரியும். ஒரு சமுக இயக்கமான திராவிட கழகத்தில் இருந்து அது எப்படி ஒருவானது என்று ஆழமாகத் தெரியாது.

சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் மலர்மன்னன் எழுதிய “தி.மு.க உருவானது ஏன்?”  அதைச் சுறுக்கமாக (159 பக்கங்கள்) விளக்குகிறது. இந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்குக் கடையில் இதைப் பார்த்ததும் நினைவுவந்து கடந்தச் சில நாட்களில் படித்து முடித்தேன். பல விசயங்களை எழுதாமல் தலைப்பில் உள்ள ஒரு கேள்வி ”தி.மு.க உருவானது ஏன்?” அதற்கு ஆசிரியர் சொல்லவரும் மூன்று காரணங்களை மட்டுமே எழுதியுள்ளார், அதற்கு பாராட்டுக்கள். அந்த மூன்று காரணங்கள் – கருப்புச் சட்டை அணிவது, ஆகஸ்டு 15ஐ கொண்டாடுவது, மணியம்மை திருமணம்.

dmk - how it got founded

Categorized in:

Tagged in:

,