சில நாட்களுக்கு முன்பு அவசரமாக ஒரு தமிழ் அபுனைவு புத்தகம் வாங்க வேண்டி இருந்தது. பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களைத் தவிர்த்து இன்றைக்குத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கக்கூடிய கடைகள் சென்னையில் மிக மிகக் குறைவு. அவற்றினுள் பலவிதமான பலநூறு தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும் புத்தகக் கடை சென்னை தி.நகர் பனகல் பூங்கா அருகில் இருக்கும் “நியூ புக்ஸ் லண்ட்ஸ்”.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கடைக்குச் சென்று பார்த்தபோது, பல பதிப்பாளர்களின் தமிழ்ப் புத்தகங்களை ஒரே இடத்தில் பார்த்து வாங்கக் கூடிய வகையில் அந்தக் கடை இன்னும் இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. உரிமையாளர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களைப் பார்த்து இந்தக் கடையைத் தொடர்ந்து நடத்தி வருவதற்கு அவருக்கு நன்றி கூறி, எனக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கி வந்தேன்.

#புத்தகக்கடை #tamilbookshop #newbooklands

Categorized in:

Tagged in: