
Kuselan (2008)
குசேலன் – பசுபதி, மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துல்ல ரஜினியின் புதியப் படம். கடந்த 14ம் தேதி அபிராமி அரங்கில் பார்த்தேன் – ஏன் போனேன் என்றாகிவிட்டது. பி.வாசு போன்றோரு சிறந்த இயக்குனர் இப்படி ஒரு சுமாரான படத்தை அதுவும் மலையாலத்தில் வந்த ”கதபறயும் போல்” என்ற நல்ல கதையை இப்படி எடுத்துள்ளார் என்பது மிகுந்த ஏமாற்றம்.
படம் ஏமாற்றம் என்பதை காட்டும் விதமாக அபிராமியில் கீழ்த்தளத்தில் ஒருவர் கூடயில்லை. வெளிவந்த சில நாட்களேயான ரஜினியின் புதிய படம் என்பதை நம்பவே முடியவேயில்லை.
- படத்தில் ஒருவர்க்கூடக் தங்களின் கதாபத்திரங்களோடு ஒட்டவேயில்லை
- பசுபதி படம் முழுவதும் எதையோ யோசனைச் செய்துக்கொண்டேயிருக்கிறார், அவர் பேசும் காட்சியில்கூட அப்படித்தான். ஏன் இதில் நடிக்க சம்மதிதோம் என்றோ?
- இசை பிரகாஷ் – ஒரு பாடல்கூட நினைவிலில்லை. பேரின்ப பேச்சுக்காரன் பாடல்கூட வெயில் படத்தின்வாடை தான் அடிக்கிறது
- ரஜினி நடித்திருக்கும் அசோக் குமார் கதாபத்திரத்திற்குக் கடைசி காட்சி தவிர வேறு ஒரு காட்சிகூடயில்லை. பாடல் காட்சிகள்கூட முந்தியப் படங்களின் தழுவல் – புதியதாக எதுயும் யோசிக்க முடியவில்லை என்பது வேட்கம்.
- முழுப் படமும் ரஜினியின் சுய விளம்பரம். இதைப் பார்க்க ஒரு தொலைக்காட்சியில் ரஜினியின் முழுநீள பேட்டியே போதும்.
நானும் என் சிறு வயதில் ரஜினியின் ரசிகன்தான். ஆனால், குசேலன் திகட்டுகிறது.
படம் இப்படி என்றால் அபிராமி அரங்கம் இதைவிட மோசம். வெளியில் நன்றாகயிருந்தாலும் உள்ளே சென்றவுடன் ஒரு பத்து வருடத்திற்கு முன்பிருந்த திரையரங்குகளை சந்தேகமில்லாமல் நினைவுபடுத்துகிறது – அவ்வளவு பழசு.
Kuselan- A film Rajni will love to forget
