சுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் என்னை பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசினேன். எனக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல. ஆனால் அலுவலுக்குக்காக தொழில்நுட்பங்களை ஆங்கிலத்திலேயே பேசிப்பழகியதால், தமிழில் கணினி மற்றும் செல்பேசி முன்னேற்றங்களைப் பேசுவதில் சிறு தயக்கம் அவ்வளவு தான் :-).

இந்த நிகழ்ச்சி நாளைக் காலை 8 மணிக்கும், மாலை 11 மணிக்கும் ஒளிப்பரப்பாகிறது. மறக்காமல் பாருங்கள்!

Tagged in: