October 2025

ஐ (AI) – ஓர் எளிய விளக்கக் காணொலி

கிழக்கு நியூஸ் ஓடையில் நான் பேசிய காணொலி. செயற்கை நுண்ணறிவை (ஏ ஐ) ஓர் எளிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு ஏஐ எப்போது தொடங்கியது, அதன் பல்வேறு பிரிவுகள் என்ன? ஏன் சாட்ஜிபிடி கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறது? ஏஜிஐ…

கதை கேளுங்கள்

சாதாரண கிராமத்தில் பிறந்து, பதினோராம் வகுப்பு படிக்கும்வரை இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒருவர்தான் இந்தப் பிரபலச் செயலியின் நிறுவனர் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் லால் சந்த் பிசு. அவர் உருவாக்கிய குக்கூ எஃப்.எம் செயலியின் கதை இது. 2017களில் அடுத்து…

Sandy's Chocolate Laboratory

சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ

சென்னையில் சாக்லேட் (கோகோ) இனிப்பு வகைகளில் தங்களைச் சிறந்தவர்கள் எனச் சொல்லும் உணவகம் “சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ” (Sandy’s Chocolate Laboratory). ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரிஸ் சாலையிலிருந்து பசுமைவழி (கிரின்வேஸ்) சாலைக்குச் செல்லும் இடையில் இருக்கும் ராஜா அண்ணாமலைபுரம் முதல் முக்கிய…

எந்த ஏஐக்கு சந்தா கட்டலாம் வீடியோ

சேப்பியன் ஜீனோ ஒடையில் (Sapien Geno) நானும் நண்பர் ஷான் அவர்களும் பங்கு பெற்ற இந்த காணொலியில் சந்தையில் கிடைக்கும் பல செயற்கை நுண்ணறிவு செயலிகளில் எதற்குச் சந்தா கட்டலாம், அதன் சாதகப் பாதகங்களை அலசுகிறோம். சுருக்கமாக: கூகுள் பயனர்கள்: கூகுள்…

இலான் மஸ்க்கின் கிராகிப்பீடியா!

இணையத்தைப் பயன்படுத்தி மனிதக் குலம் சாதித்ததில் முக்கியமானதாக நான் பார்ப்பது கட்டற்ற மின்-கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் உருவாக்கம். இன்று உலகில் இருக்கும் எல்லோருக்கும் எளிதாகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளோடு எந்த நேரமும் இலவசமாக அறிவியல், வரலாறு, கலை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளின் தகவல்களும்…

VB World, Velachery

பொதுவாக சென்னையில் சைவம் என்றால் இட்லி, தோசை, சாம்பார், ரசம், சாத வகைகள், காய்கறி என்று மட்டுமே நினைத்திருப்போம். இதற்குக் காரணம் சைவம் என்றால் இங்கே இருப்பது சரவண பவன், சங்கீதா, ஏ2பி உணவகங்களே. இவற்றைத் தாண்டி ஒன்றிரண்டு ஜைன உணவுகளையும்…