Recently, Ryan Roslansky, CEO of LinkedIn, said that “the future of work no longer belongs to those with the fanciest degrees or who studied at the best colleges, but to those who are adaptable, forward-thinking, and ready to embrace AI tools.”
மாணவர்களே தயவுசெய்து இதையெல்லாம் நம்பி படிக்காமல் இருக்க வேண்டாம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நல்ல படிப்பும் கல்வியுமே நிரந்தரச் சொத்து. அது செயற்கை நுண்ணறிவு உலகமாகவே இருந்தாலும் நேர்மையான வழியில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக் கூடியது கல்வி மட்டுமே.
இந்த அறிவுரைகள் ஏ.ஐ. பற்றிய பிம்பத்தை இன்னும் பெரியதாக்கி அவர்களின் தயாரிப்புகளை முதலீடுகளை விற்கச் சொல்லப்படுபவையாக இருக்கலாம். பல சமயங்களில் அவர்களின் படைப்புகளைப் பற்றி அவர்களுக்கே ஒருவித மாயத் தோற்றம் வந்துவிடுகிறது.
இன்று எல்லோருக்கும் ஏ.ஐ.பற்றிய புரிதல் அவசியம். சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவதைத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் வந்து கொண்டிருக்கும் ஏ.ஐ. நுட்பங்களில், செயலிகளில் மாணவர்களுக்குக் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி வேண்டும். செயற்கை நுண்ணறிவின் பரவலால் கற்பிக்கும் முறை, கற்கும் முறை, மொத்தப் பாடத்திட்டங்கள், நிறுவனங்கள் நடத்தப்படும் முறை என எல்லாவற்றிலும் பாதிப்பு மாறுதல்கள் இருக்கும். இவற்றை நான் மறுக்கவில்லை. ஆனால் அது படிப்பின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
குறிப்பு: நான் தினமும் ஏ.ஐ. பயன்படுத்துகிறேன், அதைப் பற்றிப் படித்துக் கொண்டேயிருக்கிறேன், அறிவுரை வழங்குகிறேன், எழுதுகிறேன், இருந்தாலும் சொல்லுகிறேன் இப்போதைக்கு எந்த ஏ.ஐ. வந்தாலும் ஒரு நல்ல கல்லூரியிலிருந்து அடிப்படைப் பட்டப்படிப்பு அவசியம். மறுத்துச் சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். மறவாதீர்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

