சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ

Sandy's Chocolate Laboratory
Sandy's Chocolate Laboratory

சென்னையில் சாக்லேட் (கோகோ) இனிப்பு வகைகளில் தங்களைச் சிறந்தவர்கள் எனச் சொல்லும் உணவகம் “சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ” (Sandy’s Chocolate Laboratory). ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரிஸ் சாலையிலிருந்து பசுமைவழி (கிரின்வேஸ்) சாலைக்குச் செல்லும் இடையில் இருக்கும் ராஜா அண்ணாமலைபுரம் முதல் முக்கிய சாலையில், ஆர்.ஆர்.டோனலே நிறுவனத்திற்கு எதிரில் இருக்கிறது இந்த உணவகம்.

வெளியிலிருந்து பார்த்தாலேயே பணக்காரர்களுக்கான உணவகமாகத் தோன்றினாலும், நான் போன மாலை வேளையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரும், சாதாரண அலுவலகப் பணியாளர்கள் போன்ற தோற்றத்தில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் போனது மாலை ஐந்து மணி, செவ்வாய்க் கிழமை. கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று கொண்டிருந்தேன். இடைபலகாரமாக ஏதாவது சாப்பிடலாம் என்று இங்கே காரை நிறுத்தினேன். சைவ உணவில் உடனடியாக எது கிடைக்கும் என்று கேட்டு ஆர்டர் செய்தேன்:

வெஜ் லோடட் பர்கர் (Veg loaded burger) அதாவது காய்கறிகள் நிரம்பிய பர்கர்
மற்றும் குடிக்க
☕ஹாட் சாக்லேட் (Signature Hot Chocolate Dark)

வெஜ் லோடட் பர்கர் (Veg loaded burger)
வெஜ் லோடட் பர்கர் (Veg loaded burger)
ஹாட் சாக்லேட் (Signature Hot Chocolate Dark)
ஹாட் சாக்லேட் (Signature Hot Chocolate Dark)

பர்கரில் இரண்டு பன்களுக்கு நடுவே இரண்டு தடியான வடைகள் (Patty) மற்றும் இலைகளும் இருந்தது. இதனோடு நிறைய உருளைக் கிழங்கு வறுவல்களும் (பிரஞ்ச் ப்ரைஸ்) கொடுத்திருந்தார்கள். சிற்றுண்டியாக இருக்கும் என்று எண்ணிய பர்கர் ஒரு முழு உணவாக இருந்தது. ஹாட் சாக்லேட் நல்ல சூட்டுடன் வந்தது. சென்னையிலே சிறந்தது இது என்றெல்லாம் சொல்ல மாட்டேன், ஆனால் நல்ல சுவையாகக் கெட்டியாகவும் இருந்தது.

பர்கரின் விலை ரூ 435, ஹாட் சாக்லேட் விலை ரூ 375, ஐந்து சதவிகித ஜிஎஸ்டி வரியும், அதே அளவு சேவைக் கட்டணமும் சேர்த்தது இந்த விலைகள்.

Sandy's Chocolate Laboratory, Alwarpet, Chennai
Sandy’s Chocolate Laboratory, Alwarpet, Chennai

இந்த வழி வருவீர்கள்; இந்த உணவு வகைகள் பிடிக்கும்; இந்த விலையைக் கொடுக்க முடியும் என்றால் இங்கே வந்து உண்ணலாம். குளிர்சாதனப் பெட்டியில் பார்வைக்காக வைத்திருந்த சாக்லேட் பேஸ்ட்ரிஸ் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது, அவற்றையும் நீங்கள் சுவைத்துப் பார்க்கலாம்.

“சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ” சாக்லேட் இனிப்புகளை விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல இடம், ஆனால் விலையும் அதற்கேற்ற மாதிரி இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading