08.08.2025 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட மின் நூலகத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரஜேந்திர நவ்நீத், இ.ஆ.ப., தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் (பொ) திரு. ரெ. கோமகன், உதவி இயக்குநர் (மின் நூலகம்) திரு. செல்வ புவியரசன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் "தமிழ் மின்நூலகம்"
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் “தமிழ் மின்நூலகம்”

இந்த இணைய நூலகத்தில் [TamilDigitalLibrary.in] பல்லாயிரம் அச்சுநூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் எனத் தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் உள்ளன. இதைத் தமிழ்க் களஞ்சியம் எனவும், தமிழர்களுக்கான பெருமை, ஆய்வாளர்களுக்கான வரப்பிரசாதம் எனவும் சொல்லலாம். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கும் இதில் இருக்கும் தகவல்கள் மிக முக்கியமாக இருக்கும்.

At the Tamil Nadu Secretariat on 8 August 2025: Hon’ble Minister Dr Palanivel Thiagarajan presenting a memento to Venkatarangan Thirumalai. Grateful for the warm conversation.
At the Tamil Nadu Secretariat on 8 August 2025: Hon’ble Minister Dr Palanivel Thiagarajan presenting a memento to Venkatarangan Thirumalai. Grateful for the warm conversation.

இந்த முயற்சிக்காக அமைக்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு முதன்மை ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து ஆலோசனை வழங்க எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதில் ஈடுபட்டது எனக்கு மனநிறைவைத் தந்தது.

என் பார்வையில் ஏன் இந்த முயற்சி முக்கியமானது என்பதைப் பற்றிய சிறு காணொலி கீழே:


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading