துருக்கிஷ் காபி (Turkish Coffee) முன்னர் மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டும் கிடைத்த இது இப்போதெல்லாம் சென்னையிலும் பல உயர்மட்டக் காபி கடைகளிலும் கிடைக்கிறது.

அது என்ன துருக்கிஷ் காபி?

துருக்கி காபி என்பது நம்ம ஊர் ஃபில்டர் காபி மாதிரி இல்லை. அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்றால், நுண்துகள்களாக அரைத்த காபி பொடியைத் தண்ணீருடன் சேர்த்து நேராகக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் அந்தக் கலவையை வடிகட்டாமல் அப்படியே (படத்தில் இருப்பது போன்ற) சிறிய குவளைகளில் ஊற்றி, மூடி வைக்க வேண்டும். சில நிமிடங்களில் காபி தூள்கள் அடியில் தங்கிவிடும். அதன்பிறகு கலக்கவே கூடாது.

வாழ்வின் முதல் முத்தத்தைப் போல, மிக மெதுவாகக் குவளையைத் தூக்கி, மேலே இருக்கும் வடிநீரை (decoction) மட்டுமே சப்பிச் சப்பிக் குடிக்க வேண்டும். தேவைப்படுபவர்கள், மிகச்சிறியளவு தேனைச் சேர்த்துக்கொள்ளலாம்.

Turkish Coffee
Turkish Coffee
துருக்கிஷ் காபி
துருக்கிஷ் காபி

படக்குறிப்பு: சென்ற வாரம் நண்பருடன் சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டல் “புரூ ரூம்” (Brew Room in Hotel Savera) சென்றபோது இதைக் குடித்தேன். அடர்த்தியான, அருமையான காபி சுவை. இதைக் கருப்பாகவே குடிக்க வேண்டும். இதில் சக்கரைப் கலந்தால் ருசி அதன் தனித்தன்மை போய்விடும், சாமிக் குற்றமாகிவிடும் என்று சொல்பவர்கள் உண்டு. எனக்குக் கருப்புக் காபி பிடிக்கும் என்பதால் சிரமமாக இல்லை. இந்தக் காபியின் சுவை சில மணி நேரம் நாவில் இருக்கும். பாரம்பரிய முறைப்படி இது சிறிய கோப்பைகளில் கொடுக்கப்படுவதால், இரண்டு வாய் அளவு மட்டுமே இருக்கும். இந்த விலைக்கு மூன்று பெரிய டம்ளர் அளவு மெட்ராஸ் ஃபில்டர் காபி குடித்திருக்கலாமே என்றெல்லாம் குறை சொல்லக்கூடாது.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading