பல செயலிகள் செய்யும் வேலையை ஒரே செயலி செய்ய முடியுமா? இரு நிறுவனர்கள் உருவாக்கிய இரண்டு செயலிகள் ஒன்றாக முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்திருப்பது பீப்பர் (Beeper).
வாட்ஸ்அப்பைத் தாண்டி நம்மில் பலரும் பல அரட்டைச் செயலிகளைச் சூழ்நிலையைப் பொறுத்துப் பயன்படுத்துவோம். பலவற்றிலும் கணக்குகள் வைத்திருப்போம். உதாரணமாக, குறிப்பிட்ட நபரோடு ஃபேஸ்புக் மெசஞ்சரில் தொடர்பில் இருப்போம். நமது வாடிக்கையாளர் லிங்க்டின் மெசஞ்சரில் இருப்பார், அங்கேதான் அவரைத் தொடர்பு கொள்ள முடியும்.
இப்படி அடுக்கிக் கொண்டே போனால் டெலிகிராம், சிக்னல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று பட்டியல் நீளும். எல்லாச் செயலிகளையும் நிறுவுவதோடு, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்து எதில் யார் இருக்கிறார், யாரோடு எதில் கடைசியாகப் பேசினோம் என்று தேடுவது எளிதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க வந்துள்ளது பீப்பர்.
தொடர்ந்து படிக்க இன்றைய மெட்ராஸ் பேப்பர் இதழுக்கு செல்லவும்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.


பல செயலிகளின் செய்திகள் ஒற்றைச்செயலியில்…
கிஷன், எரிக் , மாட் மூவரின் கைவண்ணம் ..
சிறந்ததொரு முயற்சி..
ஒவ்வொரு செயலியின் தகவல்கள் பல்வேறு முறை திறந்து பார்க்காமல் ஒற்றை செயலியில்.All in One app
.
தொழில்நுட்பங்கள் இன்னும் இந்த சாத்தியக்கூறுகளை வரும் காலங்களில் அதிகப்படுத்தும்…
காத்திருப்போம்…நல்லதொரு செயலி…உங்கள் கட்டுரைமிகவும் பயனுள்ளதாக உள்ளது