இது இன்றைக்கு வந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ். மொத்தம் எத்தனைப்பக்கங்கள், எத்தனை இணைப்புகள் என்றே எண்ணமுடியாத அளவு அதிகமாக இருக்கிறது. முக்கால்வாசி பக்கங்கள் விளம்பரங்களாகவே இருக்கும். நிறுவனங்கள் பணம் கொடுக்கிறது, நாளிதழ் தொழிலை ஓரளவு உயிரோடு வைத்திருக்க உதவுகிறது என்றாலும் இவற்றின் பயன் என்னவென்று தெரியவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்பெல்லாம் (இப்போதும் அப்படியா என்று தெரியாது) நூறு பக்கங்களுக்கு மேல் வார இறுதியில் வரும் நாளிதழ்களில் வரும். இங்கும் ஒரு காலத்தில் குங்குமம் போன்ற பத்திரிகையோடு பல இணைப்புகளும், ஒரு சிறு மளிகைக் கடையும் வந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று காகிதமாக (அல்லது இணையம் வழிகூட) நாளிதழ்களையோ பத்திரிகைகளையோ பெரும்பாலானோர் படிப்பது கிடையாது. முப்பது வயதிற்குக் குறைவாக இருப்பவர்கள் நிச்சயம் இவற்றைப் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் செய்திகள் எல்லாமே வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே வருகிறது. முப்பது வயதிற்கு மேற்பட்டோருக்குச் செய்திகள் தொலைக்காட்சி மூலமாகவே கிடைக்கிறது.

நான் தினமும் வாங்கும் ஒரு தமிழ், ஒரு ஆங்கில நாளிதழ்களில் வருகின்ற (ஓரளவு) எல்லாச் செய்திகளின் தலைப்புகளையாவது படிக்கும் வழக்கம் உள்ளவன். வெளியூர் சென்று திரும்பினால், விடுபட்டுப் போன நாட்களின் இதழ்களைப் படித்து முடிப்பேன். எனக்கே இந்தளவு அதிகப் பக்கங்கள் தேவையில்லாததாகப்படுகிறது.
இதில் வரும் விளம்பர இணைப்புகளை நான் திறந்து பார்ப்பது கூட இல்லை. இப்படி இருக்கையில் ஏன் நிறுவனங்கள் இந்த இணைப்புகளில் எல்லாம் விளம்பரம் செய்து வீண் செய்கிறார்கள் என்று புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சொல்லவும். நான் தவறாகப் புரிந்திருந்தாலும் தன்மையாக விளக்கவும், தெரிந்து கொள்கிறேன். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


You may not need it . But its advertisement revenue that matters for them . if there is no advertisement you cannot get the paper for Rs five and Eight .
That’s exactly my point. Are the advertisers seeing any real benefit or RoI, they can’t be ignorant of the benefits for decades and continue to spend. That’s where I am unable to understand.