எல்லோரும் ஒரு வழியில் போனால் நம் ஆள் “எலான் மஸ்க்” வேறு மாதிரி போவார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் ஒரு புது வீடியோ மாதிரியை இலவசமாக வெளியிட்டிருக்கிறது.

அவர்களின் கிராக் (Grok) செயலியைப் பதிவிறக்கி, நீங்கள் கனவு காணும் எந்த ஒரு சூழ்நிலையை/செயலைச் சொன்னால் அதை வீடியோவாக உருவாக்கிக் கொடுக்கும். நீங்கள் படங்களைக் கொடுத்தால் அதை ஓடும் வீடியோக்களாக மாற்றிக் கொடுக்கும். இது மஸ்கின் வெளியீடு அதனால் இதற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரபலங்களின் படங்களைக் கொடுத்தாலும் மாற்றிக் கொடுக்கும் போல, அது பொறுப்பற்ற செயல் என்பதால் நான் முயன்று பார்க்கவில்லை. இதைக் கொண்டு ஆபாசப் படங்களும் உருவாக்கப்பட்டு இணையத்தில் உலவிக் கொண்டிருக்கிறது, நிற்க. நான் சொன்னவுடன் அதைப் போய் தேடிப் பார்த்து ஊக்குவிக்க வேண்டாம் :-)

நினைவில் கொள்ளவும். கண்ணால் பார்ப்பதும் போய், காதால் கேட்பதும் போய், தீர விசாரிப்பதே மெய். நன்றி.

குறிப்பு 1: கிராக் (Grok) செயலி பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும். பரிசோதனை நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. நான் பயன்படுத்திய மூன்று முறையும் என் ஐபோன் 16யே மறு தொடக்கம் (Reboot) ஆனது. அதனால் உங்கள் செல்பேசியில் செய்து கொண்டிருக்கும் வேலையை முடித்துவிட்டு முயலவும்.

குறிப்பு 2: இணைப்பில் இருக்கும் இரண்டு வீடியோக்களும் நான் கிராக்கைக் கொண்டு உருவாக்கியவை. முழுவதும் செயற்கையான ஏ.ஐ. காணொலிகள். இவை உண்மையில்லை. எந்தவொரு யானையோ குரங்கோ பயன்படுத்தவில்லை, அவற்றைத் துன்புறுத்தவும் இல்லை.

குறிப்பு 3: நான் உதாரணமாகப் பயன்படுத்திய பிராம்ப்ட்கள் கீழே இருக்கிறது.

a video of a computer made out of sugar candy in a forest, with a lifelike white elephant operating it and browsing the venkatarangan dot com website
a video of a computer in an office room, with a lifelike white monkey in suit and tie operating it and browsing the venkatarangan dot com website

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading