கீழ்ப்பாக்கம் ஈகாவும் டிபன் சாஸ்த்ராவும்

சென்னையின் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று ஈகா.

கீழ்ப்பாக்கத்தில் அந்தப் பகுதியைக் கடந்து எந்தப் பக்கம் போக வேண்டுமானாலும், ஈகாவை மையமாக வைத்து வழி சொல்லுவார்கள். கடைசியாக நான் இங்கே திரைப்படம் பார்த்தது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. போன வாரம் அஜித்தின் விடாமுயற்சி படத்தைப் பார்க்கச் சென்றேன்.

என் வீட்டிலிருந்து மெட்ரோ இரயிலில் நீல நிற வழித்தடத்தில் ஏறி, சென்ட்ரலில் பச்சை நிற வழித்தடத்திற்கு மாறி, இரண்டொரு நிறுத்தங்களைத் தாண்டி வரும் கீழ்ப்பாக்கம் மெட்ரோ நிறுத்தத்தில் இறங்கினேன். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் (B3) வாசல் வழியாக வந்தால், நான்கு நிமிட நடையில் ஈகா வந்துவிடும். உள்ளே போனால் சாப்பிடச் சரியாகக் கிடைக்காது என்ற கவலையால், வாசலில் இருக்கும் “டிபன் சாஸ்த்ரா” உணவகத்தில் சுவையான பன் பட்டர் ஜாம் மற்றும் பாதாம் பால் சாப்பிட்டுவிட்டு, உள்ளே சென்றேன்.

திரையரங்கம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. பி.வி.ஆர் அளவு தரம் இல்லை, ஆனால் பிரமாண்டமான திரை! மேல்மாடத்தில் இருந்து படம் பார்க்கும் போது சிறப்பான அனுபவமாக இருந்தது. திரையரங்கின் உள்ளே உள்ள சாப்பாடு வகைகள் மிகவும் சுமாரானவை தான். முக்கியமாகக் கழிப்பறை சுத்தமாக இருந்தது.

Chennai Metro - Kilpauk Metro
Chennai Metro – Kilpauk Metro
Tiffin Shastra - Ega Theatre
Tiffin Shastra – Ega Theatre
Bun Butter Jam and Badam Milk
Bun Butter Jam and Badam Milk
Ega Cinemas
Ega Cinemas
Ega theatre screen
Ega theatre screen
Kilpauk Ega Cinemas
Kilpauk Ega Cinemas

அடுத்த முறை பி.வி.ஆர் திரையரங்குகளில் இடமில்லை என்றால், ஈகாவிற்குப் போய் வரலாம். மெட்ரோவில் போக முடியும் என்பதும், “டிபன் சாஸ்த்ரா”வும் இதன் சிறப்பு.

Disclosure: I write reviews about (products or restaurants) that I have (bought for my usage, or visited) and paid in full. There were no sponsorship or advertisement, or commission of any sort involved in this post.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading