சென்னையில் புகழ்பெற்ற ஸ்டேஷனரி கடை-ஹிந்துஸ்தான் டிரேடிங்

என் சிறு வயதில் எங்களின் லிப்கோ புத்தகக் கிடங்குகளிலும், கடையிலும் வளர்ந்ததால் என்னவோ அச்சகங்களை, எழுதுபொருளகங்களைப் பார்த்தாலே எனக்கு ஓர் ஈர்ப்பு. அதுவும் ஸ்டேஷனரி (எழுதுபொருளகம்) கடை என்றால் ஒன்று இரண்டு பொருட்கள் வாங்குவேன் அவ்வளவு தான், ஆனால் பல நேரம் வேடிக்கை பார்க்கப் பிடிக்கும்.

சென்னையில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுதுபொருளகங்கள் பல இருந்தது. ஆனால் இன்றைய செல்பேசி காலத்தில் அவற்றில் பலவும் மூடப்பட்டுவிட்டது. தற்சமயம் இருப்பதில் புகழ்பெற்றது ராயப்பேட்டையில் இருக்கும் ஹிந்துஸ்தான் டிரேடிங் கம்பெனி – முன்னால் ஹோட்டல் அஜந்தா அருகில் இருக்கிறது. பெரிய கடை, மூன்று மாடிகள் முழுவதும் எழுதப் பயன்படுத்தும் பேனா, காகிதம், மை, ஒட்டுப்பொருட்கள், துடைப்பான் மற்றும் பல. இதைத் தவிர ஓவியர்களுக்குத் தேவையான தாள்கள், வண்ணங்கள், தூரிகைகள் என்று பல. பேனாவில் மட்டுமே பத்து ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலான வகைகள் இங்கே கிடைக்கிறது. முக்கியமான விசயம், இங்கே இருக்கும் பணியாளர்களுக்கு எந்தப் பேனா எதற்குப் பயன்படுத்தலாம், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்களாக இருப்பதால் உங்களுக்குச் சரியான பரிந்துரைகளைச் செய்வார்கள்.

இதையெல்லாம் எதற்கு இப்போது சொல்கிறேன்? என் நண்பரின் மகளுக்கு இந்த மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது, அவளைப் பார்த்து வாழ்த்துக் கூறி பேனா பரிசளிக்க விரும்பினேன் . நல்லதாக வாங்க வேண்டும், எங்கே போகலாம் என்று யோசித்த போது இன்னொரு நண்பர் பரிந்துரை செய்தது இந்த ஹிந்துஸ்தான் டிரேடிங். உள்ளே நுழைந்தவுடன் பிரமித்து விட்டேன், அவ்வளவு எண்ணிக்கையிலான வகைகள். சென்று பாருங்கள் நீங்களும் மகிழ்வீர்கள்.

Hindustan Trading Company Art Store
Hindustan Trading Company Art Store
Hindustan Trading Company, Chennai
Hindustan Trading Company, Chennai
Colour pencils!
Colour pencils!

பின் குறிப்பு:
ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படும் எழுது பொருட்கள் மிக நேர்த்தியாக இருக்கும். சில ஆண்டுகள் முன்பு வரை இவை தெற்காசியாவில் இருக்கும் ஜப்பான் கடைகளில் கிடைக்கும். இப்பொழுதெல்லாம் நம்மூர் பேரங்காடிகளிலேயே ஜப்பான் கடைகளில் வந்துவிட்டது – அங்கே அவர்கள் பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் அழகே அழகு.

போன மாதம் பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் “மூஜி” என்கிற ஜப்பான் கடைக்குச் சென்றிருந்தேன், அவர்களிடம் இருந்த சில எழுது பொருட்களின் படங்கள் கிழே.

"Muji" japanese store in Manila, Philippines
“Muji” Japanese store in Manila, Philippines

Disclosure: I write reviews about (products or restaurants) that I have (bought for my usage, or visited) and paid in full. There were no sponsorship or advertisement, or commission of any sort involved in this post.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading