போன வாரம் இரவு உணவுக்குப் பின்னர், லஸ்ஸி குடிக்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையில் எனக்குப் பிடித்த “லஸ்ஸி” கிடைக்கும் இடம்: “பம்பாய் லஸ்ஸி”, இது தேவி திரையரங்குக்குப் பின்னால் இருக்கும் பர்பர் அகன் சந்தில் இருக்கிறது. அந்த நேரத்தில் அந்தக் கடை திறந்திருக்குமா என்பது சந்தேகம் என்பதால், நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் (பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகம் DPI அருகில்) வந்திருக்கும் ராஜஸ்தான் தின்பண்டங்களுக்குப் புகழ்பெற்ற பிக்கானர்வாலா உணவகத்திற்குச் சென்றேன். அவர்களது “கேசரி லஸ்ஸி” சிறந்தது என்று சொன்னார்கள், விலை சுமார் ரூபாய் 100. பார்க்கவே மஞ்சள் நிறத்தில் இருந்தது, மேலே போடப்பட்ட மலாய் பாலேடும் கூட பழுப்பு நிறத்தில் இருந்தது. லஸ்ஸி தயிர் அடர்த்தியாகவே இருந்தது, மிக இனிப்பாகச் சுவைத்தது. அடுத்த முறை அந்தப் பக்கம் போனால் குடித்துப் பார்க்கவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

