இந்தக் காட்சி இந்தச் சுதந்திர தினத்தன்று (15 ஆகஸ்ட் 2024) மாலை நான்கு மணிக்கு நான் எடுத்தது. இடம்: க்ராஸ்வேர்டு புத்தகக்கடை, நேக்ஸஸ் விஜயா பேரங்காடி, வடபழனி, சென்னை. இளைஞர்கள் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று சொல்கிறோம் – அது உண்மையென்றால் எப்படி இந்தக் கடை முழுவதும் சிறுவர்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து இந்தக் கடையில் காபியோ, தேநீரோ விற்பதில்லை, உட்காரவும் இடம் கிடையாது, இருந்தும் இந்தளவு கூட்டம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? உங்களின் கருத்தென்ன?
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.


யார் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதுவே அவர்கள் கண்களுக்குத் தெரியும் என்ற விதிப்படியே உலகம் இயங்குகிறது.
உண்மை தான். ஆனால், இந்த விசயத்தில், ஒரு (சின்னஞ்சிறு) நல்லதை மிகைப்படுத்திக் கூறுவதும் சமூகத்திற்கு நல்லது செய்யக்கூடும் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்டது.