அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், மேற்கு மாம்பலம்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், இது 400 ஆண்டுகள் புராதனமானது.

நான் சென்னை மேற்கு மாம்பலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறேன். பல ஆயிரம் முறை அந்த வழியாகச் சென்றிருக்கிறேன். அந்த இடம் எப்போதும் கூட்டமாக இருக்கும், குறுகலான சந்து, வாகனங்கள் நிறுத்த முடியாது, அதனால் ஒரு முறை மட்டுமே உள்ளே சென்றிருக்கலாம் என்று நினைவு. நேற்று ஓர் உறவினர் கல்யாண விழா அருகில் இருந்த காசி மடம் கல்யாண மண்டபத்தில் நடந்தது, நடுவில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி, உள்ளே சென்று நன்றாக வணங்கி வந்தேன்.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்: இரண்டு வாயிலும் பிரமாண்டக் கோபுரங்கள். சென்ற ஆண்டு தான் குடமுழுக்கு நடந்திருக்கிறது. எல்லாச் சன்னிதிகளும் புத்தம் புதிதாக ஜொலிக்கிறது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக்கருதப்படும் திருக்கோயில் இது. இங்கே மூலவர் காசி விசுவநாதர்; தாயார் காசி விசாலாட்சி ஆவர். இவர்களோடு விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நவக்கிரகச் சன்னிதிகளும் அமைந்துள்ளது. மொத்த இடம் என்று பார்த்தால் பெரிய கோயில் இல்லை, சுலபமாக எல்லாச் சன்னிதிகளையும் சில நிமிடங்களில் தரிசித்து, வலம் வரலாம் – அமைதியான, அழகான, அருள்மிகுந்த கோயிலிது.

இந்தப் பக்கம் போகும் போது கட்டாயம் சேவிக்க வேண்டிய திருக்கோயில் இது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading