ஒரு காலத்தில் நான் மணிக்கணக்காக இந்த மாதிரி சிடி, விசிடி கடைகளில் கழித்திருக்கிறேன்.
1990களில் சிங்கப்பூர் முஸ்தபாவில், கோலாலம்பூர் கடைகளில் தமிழ் படங்களின் அதிகாரப்பூர்வப் பதிப்புகளைத் தேடித் தேடி வாங்கி இருக்கிறேன். ஒவ்வொரு முறை அமெரிக்க போகும் பொழுதெல்லாம் குறைந்தது ஐந்து அல்லது ஆறு குறுந்தகடுகளை, சில சமயம் டிவி தொடர் குறுந்தகடுத் தொகுப்புகளை வாங்கி வருவேன்.
இப்படி வாங்கிய குறுந்தகடுகளை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் டிஜிட்டல் கோப்புகளாக மாற்றி எனது தனிப்பட்ட பிளக்ஸ் சர்வரில் சேமித்து வைத்துவிட்டேன். ஒரு புத்தக அடுக்கை முழுவதும் இவை இனி தேவையில்லை என்றாலும் இவற்றைத் தூக்கிப் போட மனது வரவில்லை.
இதெல்லாம் யுட்யூப்பில் ஒரு பழைய நகைச்சுவைக் காட்சியை இன்று பார்த்த போது நினைவிற்கு வந்தது.
பிளக்ஸ் (Plex) என்பதைப் பற்றிய குறிப்பை எனது “நுட்பம்” நூலில் “தரமான இலவசங்கள்” என்கிற அத்தியாயத்தில் எழுதியுள்ளேன். இந்த நூல் அமேசானிலும் ஜீரோ டிகிரியிலும் கிடைக்கிறது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


