ஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு நேற்று மிக பிராமாண்டமாக “Music Academy”யில் நடைப்பெற்றது. இந்தப் புத்தகத்தை வெளியிடுபவரான எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் அழைப்பில் விழாவிற்கு சென்றிருந்தேன்.

இப்படி ஒரு பெரிய விழாவைத் திட்டமிடுவது, இவ்வளவு எண்ணிக்கையில் இத்தனை சிறந்த முக்கியஸ்தர்களை சம்மதிக்க செய்து அழைப்பது, கடைசியாக அரங்கம் நிறையக் கூட்டத்தை வரவழைப்பது என்பது மிக மிக கடினம். எங்களது புத்தக (லிப்கோ) நிறுவனத்தில் எனது தந்தையின் இது போன்ற உழைப்பை நேரில் பார்த்தால் எனக்கு இந்த சிரமம் நன்றாகத் தெரியும். இவ்வளவு பாடுப்பட்டு  மிக சிறப்பாக செய்ததற்கு எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி நிச்சயம் சந்தோஷப் படலாம்.

Categorized in:

Tagged in:

,