சில வாரங்களுக்கு முன் புதிய செல்பேசியை வாங்கியவுடன் செய்ய வேண்டிய அவசியமான டெக்னிகல் சடங்குகளைப் பற்றிப் பார்த்தோம். அது மட்டும் போதுமா? புதியது வந்துவிட்டதால் பழையதை அப்படியே தூக்கிப் போட்டுவிடலாமா? ஒன்று, பழைய செல்பேசியை அப்படியே உள்ளே வைத்துவிடுவோம்; இல்லை கடைக்காரரிடம் ஒரு சில நூறு ரூபாய்களுக்குக் கொடுத்துவிடுவோம். சிலபேர் நண்பர்கள் மூலம் தெரிந்தவர்களுக்கு அல்லது தெரியாதவர்களுக்கு நேரடியாகவும் செகண்ட்ஸில் விற்கிறார்கள். இவற்றில் சில ஆபத்துகள் உள்ளன.

ஐ.எம்.இ.ஐ. ரசீது
ஒவ்வொரு செல்பேசியிலும், கார் நம்பர் போன்ற முக்கிய அடையாள குறியீடு ஒன்று அதன் நினைவு செல்களில் இருக்கிறது. அதற்கு IMEI எண் என்று பெயர். நீங்களோ இல்லை வேறு யாரோ உங்கள் பழைய செல்பேசியில் புதிய சிம் கார்டு போட்டு, வேறு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தினாலும், இந்த ஐ. எம். இ. ஐ.யை வைத்து அந்த செல்பேசியை முதலில் வாங்கியது நீங்கள்தான் எனக் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியும். அதை நம்மால் மாற்ற முடியாது; அப்படியே மாற்றினாலும் அது 2017இல் வந்த சட்டப்படி இந்தியாவில் குற்றம் (மூன்று ஆண்டுகள் வரை சிறை).

எப்படி காரை, ஸ்கூட்டரை விற்றால், வாங்கியவர் இந்த தேதியில், நேரத்தில் அதை நம்மிடம் இருந்து பெற்றுக் கொண்டார் என எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொள்கிறோமோ அதைப் போலவே, பழைய செல்பேசியைத் தள்ளுபடிக்கு விற்ற கடைக்காரரிடம் ஒரு காகிதத்திலோ, அல்லது புது செல்பேசியின் ரசீதிலோ பழைய ஐ. எம். இ. ஐ.யைக் குறிப்பிட்டு எழுதி வாங்கிக் கொள்வது உத்தமம்.

மெட்ராஸ் பேப்பரில் இன்று வந்திருக்கும் எனதுக் கட்டுரை, தொடர்ந்துப் படிக்க.

தூக்கி எறிவதற்கு முன் தூக்கிக் கொஞ்சுங்கள்!

தூக்கி எறிவதற்கு முன் தூக்கிக் கொஞ்சுங்கள்!

#madraspaper

Categorized in: