இன்று புதிய  தலைமுறை டிவியில் சில நோடிகள் நான்.

சில நாட்களுக்கு முன் ஒரு கடுகளவு பேட்டி, வருகின்ற 2016 மத்திய அரசு பட்ஜெட்டில் மென்பொருள் துறை எதிர்ப்பார்பை. அதிலிருந்து கடுகளவை (கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது) மட்டும்  இன்று ஒலிப்பரப்பினார்கள். அந்த பேட்டியில் நான் கூறியதில் முக்கியமானவை கீழே:

  1. அரசு மென்பொருள் துறைக்கு, குறிப்பாக சிறுதொழில்களுக்கு வரிச் சலுகைகள் எதுவும் தர வேண்டாம், கொடுப்பது போல கொடுத்துவிட்டு பின் நடைமுறையில் அவை கடினமான, பல சமயம் புரியாத வழிமுறைகளால் நிராகரிக்கப்படுக்கிறது. வரித் துறையினரின் இந்தத் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைத்தாலே போதும். இதற்கு நிரந்தர தீர்வு, எளிமையான சட்டங்கள். அரசு துறைகளில் இருப்பவர்கள் தொழில் முனைவோர்களை நம்பிக்கையோடு அணுக வேண்டும், அவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல.
  2. குறைந்தப்பட்ச மாற்று வரியை (MAT)  நீக்க வேண்டும். இது சிறிய, குறிப்பாக புதிதாக தொடங்கிய நஷ்டத்திலிருந்து மீண்டு வந்துக் கொண்டிருக்கும் நிறுவனகளுக்கு வேதனையான சுமை. வரி எய்பவர்களை பிடிக்க தான் இது என்று அரசு சொன்னாலும், அதற்கு விடை இதில்லை. வரித்துறை விழிப்பாக வேலை! செய்வதும், தொழில்நுட்பங்களை சாதூர்யமாக பயன்படுத்துவதும் தான்.
  3. இந்தியாவில் நிறுவனங்களை தொடங்கவும், தோற்றுவிட்ட நிறுவனங்களை மூடவும் எடுக்கும் காலம், மிக அதிகம். இதை எளிமை செய்ய வேண்டும், வேகம் கூட்ட வேண்டும்.
  4. எல்லோரும் பொறியியல் தான் படிப்பேன் என்கின்ற நிலையை நீக்க, ஜெர்மனி போல தொழில்கல்விகளை அரசு அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களை இதில் ஆர்வப்படுத்த வேண்டும். இவர்களை வேலையில் அமர்த்த நிறுவனகங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
  5. இது அரசுக்கு அல்ல. ஐ.டி. துறையில் இருப்பவர்கள், குறிப்பாக பத்தாண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ளவர்கள் அவர்களாகவே அவர்களின் துறைச்சார்ந்த அறிவை, தொழில்நுட்ப திறங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சும்மா செய்ததையே செய்துக் கொண்டிருந்தால், வேலை இல்லாமல் போய்விடும்.

Categorized in:

Tagged in:

,