இது ஒரு டிஜிட்டல் விழிப்புணர்வுக் காணொலி.
“வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்” என்பது எல்.ஐ.சி. (LIC) விளம்பரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் செல்பேசிக்கும் பொருந்தும். அதனால், உங்கள் செல்பேசியின் அடையாள ரகசிய எண் (PIN) மற்றும் கூகுள் (Google) / ஆப்பிள் (Apple) கடவுச்சொற்களை உங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும். பகிர்வது கணவன் அல்லது மனைவியாக இருக்க வேண்டும் என்ற அகவுரிமைக்குள் (Privacy) நான் வரவில்லை.
ஒருவர் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டாலோ அல்லது உடல்நலக்குறைவால் சுயநினைவை இழக்க நேரிட்டாலோ, அவர்களுடைய செல்போனில் இருக்கும் முக்கியமான தரவுகளை (Data) எப்படி மீட்பது? மொபைல் PIN, பாஸ்வேர்டு, ஆன்லைன் கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை நாம் ஏன் நமக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பகிர்ந்து வைக்க வேண்டும்?
இந்த வீடியோவில், டிஜிட்டல் மரபுரிமை (Digital Legacy) மற்றும் தரவுப் பாதுகாப்பு (Data Protection) பற்றிய விழிப்புணர்வை மிக எளிமையாக விளக்குகிறோம். உங்கள் குடும்பத்தினரின் நிம்மதிக்காகவும், அவசர காலத்தில் உங்கள் முக்கியமான தகவல்களை மீட்டெடுக்கவும் இப்போதே செய்ய வேண்டிய அவசியமான வழிமுறைகளை இதில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளோம்.
முழுமையாகப் பார்த்து உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

