நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான முக்கியமான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இது குறித்துப் பொதுமக்களிடம் இந்த மாதம் 15ஆம் தேதி வரை கருத்து கேட்கப்படுகிறது. நம் எல்லோர் வாழ்வையும் ஏதாவது ஒரு விதத்தில் தீர்மானிக்கும் வல்லமை படைத்த நீதித்துறையில், இது ஒரு முக்கியமான தருணம் என்றே நான் கருதுகிறேன்.
இதைத் தொழில்நுட்பப் பார்வையில் மட்டும் பார்க்கக்கூடாது; நீதித்துறை சார்ந்த வல்லுநர்களால்தான் இதைச் சரியாக விளக்க முடியும். அதற்காகவே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. அரவிந்த ஸ்ரீவத்ஸா (Mr Arvind Srevatsa) அவர்கள் என்னோடு உரையாடிய இந்த ‘சேப்பியன் ஜூனோ’ காணொலியில் எளிதாக விளக்கியுள்ளார்.
நீங்கள் நீதித்துறை அல்லது தொழில்நுட்பத் துறைகளைச் சாராமல் இருக்கலாம்; இருந்தாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய காணொலி இது!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

