
Thamizh Padam (2010)
தமிழ் படம் (Tamizh Padam) இன்று பார்த்தேன். முழுப்படமும் உங்களை கண்டிப்பாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தமிழில் போதுவாக தமிழ் சினிமைவை, அதுவும் பிரபல நடிகர்களை நையாண்டி(Spoof) செய்யும் படங்கள் மிக குறைவு, அதுவும் வெற்றி பெறுவது இல்லை, ஆனால் இந்தப் படம் வெற்றி என்று தான் தோன்றுகிறது. அந்த வகையில் ஒரு நல்ல முயற்சி. மேலும் சிறப்பாக, கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம், ஆனால் நையாண்டி படம் தானே என்று விட்டுவிட்டார் போல இயக்குனர்.
நாயகன் சிவாவின் (RJ Shiva) நண்பர்களாக எம்.எஸ்.பாஸ்கர் (M.S.Bhaskar), வெண்ணிறை ஆடை மூர்த்தி (Venniradai Moorthy), மனோபாலா (Manobala) ஆகட்டும், பாட்டியாக பறவை முனியம்மாவாகட்டும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் நடிகர்கள் தேர்வு பிரமாதம் (நாயகியை தவிர). அதற்காகவே இயக்குனர் அமுதம் அவர்களை பாராட்டலாம். ஒரே பாட்டில் நாயகன் பணக்காரர் ஆவதாகட்டும், முடிவில் வரும் நீதிமன்றக் காட்சியாகட்டும், சினிமாப்பட்டி கிராமத்தின் அறிமுகமாகட்டும், மிதிவண்டியை சுற்றியே பத்து வயதிலிருந்து பெரியவன் ஆவதாகட்டும், வில்லன்களை எதிர்க்கும் ஒவ்வொரு காட்சியாகட்டும் எல்லாமே அருமை.
நாயகன் சிவாவுக்கும், இயக்குனர் அமுதம் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது, அடுத்தப் படத்தையும் வித்தியாசமாக செய்தால்!


