நேற்று பக்ரித் – அலுவலகம் விடுமுறை.  இரண்டு நாட்களுக்கு முன்பே இணையத்தில் பார்த்ததில் பிர்லா மற்றும் அழகிய தமிழ்மகன் போன்ற ஏந்த படத்திற்கும்  இடம் கிடைக்காதால்,  “கண்ணாமூச்சி ஏனடா” படத்திற்கு முன்பதிவு செய்து நேற்று போனோம். பிருத்விராஜ் (Prithviraj) மற்றும் சந்தியா (Sandhya) நன்றாக செய்துள்ளார்கள், ஆனால் படம் அவர்களை விட சந்தியாவின் பெற்றோர்களாக வரும் சத்யராஜ் (Sathyaraj), ராதிகா சரத்குமார் (Raadhika Sarathkumar) இருவரையும் மையமாக வைத்து தான் நகருகிறது.

படத்தில் கதை என்று எதுவும் இல்லை. அடிதடி, கொலை, கவர்ச்சி என்று எல்லா மசாலா சமாசாரங்களைத் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்க கூடிய ஓரு  முழுநீள நகைச்சுவை படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரியா.  படத்தில் பெரியாதாக பேசும்படி எதுவும் இல்லையென்றாலும் படத்தைப் பார்க்காலம்.

Categorized in:

Tagged in:

, ,