Restaurant Review

தொலைந்து போன ‘ஸ்டார்பக்ஸ்’ மோகம்!

ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடைக்குப் போய்விட்டு காபி குடிக்காத வெகு சில ஆட்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன். ஞாயிறு மாலை நண்பரைப் பார்க்கச் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அமெரிக்க ஸ்டார்பக்ஸ் காபி கடைக்குப் போனேன். கிளம்பும் முன்னர்தான் வீட்டில் நல்ல பில்டர் காபி குடித்திருந்தேன்.…

போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்

போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்

சில நாட்களுக்கு முன்னர் அடையார் இந்திரா நகரில் இருக்கும் நண்பரைப் பார்க்கப் போனேன். மதிய உணவிற்குப் பிறகு என்னையும் இன்னும் ஒரு நண்பரையும் அவர், அருகில் இருந்த புதிய ஐஸ் கிரிம் கடைக்குக் கூட்டிப் போனார். கடையின் பெயர் போலார் பேர்…

நேர விரயமா? நாவிற்கு விருந்தா? மயிலாப்பூர் சுண்டல் அனுபவம்!

பொதுவாகக் குறுங்காணொலிகள் (ரீல்ஸ்) பார்ப்பது நம் உள்ளத்திற்கும் சேமிப்பிற்கும் தீங்கு. நேர விரயமும் செலவும் செய்யவே உருவாக்கப்பட்டவை இந்தக் குறுங்காணொலிகள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், ஒரு குறுங்காணொலியால் நடந்த சிறு நன்மை இந்தக் கதை. போன வாரம் சென்னையில்…

Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai

Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் திருப்பதி பயணம் என்றாலே, சுவாமி தரிசனத்திற்குப் பிறகு கீழ்த் திருப்பதிக்கு வந்து, ‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகத்தில் ஒரு முழுச் சாப்பாடு சாப்பிடுவதுதான் வழக்கம். அவர்களின் கோங்கூரா ஊறுகாயும் பருப்புப் பொடியும் மிகப்பிரசித்தம்; அதே போல…

கேளீர் கேண்டீன் (Kaylir Canteen)

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கிருந்து ஸ்விகி மூலமாக வாங்கியிருந்த உணவு வகைகள் பிடித்திருந்தன. அதனால் போன ஞாயிறு மாலை நண்பர்கள் நால்வராக மயிலாப்பூர் கேளீர் கேண்டீன் (Kaylir Canteen) சென்றோம். உணவகம் இருப்பது மைலாப்பூர் சி.ஐ.டி. காலனியின் முதல் பிரதான (முக்கிய)…

Paneer Bhurji with Pav Bun

Paneer Bhurji with Pav Bun from Kaylir Canteen, Mylapore

இட்லி, தோசை, முந்தைய இரவு உணவின் மிச்சம் என காலையில் சாப்பிட்டுச் சலித்துவிட்டது. ஒரு மாறுதலுக்காக இன்று காலை உணவிற்காக மயிலாப்பூர் கேளீர் கேண்டீனில் (Kaylir Canteen) இருந்து ஸ்விகி (Swiggy) மூலம் ‘பனீர் புர்ஜி பாவ் பன்’ (Paneer Bhurji…

Farsi Laban, TTK Salai, Alwarpet, Chennai

சென்னையில் குனாஃபா இனிப்புக் கிடைக்கும் கடை

சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கத்தார் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே அரபு நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘குனாஃபா’ (Kunafa) என்கிற இனிப்பு வகையைச் சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அளவுக்கதிகமான சர்க்கரை இருந்தாலும், அது எனக்குப் பிடித்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பாக யு-ட்யூபில், சென்னையில்…

புதிதாகத் திறக்கப்பட உள்ள விபி வோல்டு, சாலிகிராமம்

நானும் மனைவியும் நேற்று மாலை ஓர் உறவினர் இல்லத்திற்கு வடபழனி பகுதிக்குப் போயிருந்தோம். அங்கிருந்து கிளம்பும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. சாலிகிராமம் அருணாசலம் சாலையில் வந்து கொண்டிருந்தோம். டின்னருக்கு எங்கே நிறுத்தலாம் என குப்தா பவன், நித்ய அமிர்தம் என்று…