போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்

போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்
போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்

சில நாட்களுக்கு முன்னர் அடையார் இந்திரா நகரில் இருக்கும் நண்பரைப் பார்க்கப் போனேன். மதிய உணவிற்குப் பிறகு என்னையும் இன்னும் ஒரு நண்பரையும் அவர், அருகில் இருந்த புதிய ஐஸ் கிரிம் கடைக்குக் கூட்டிப் போனார்.

கடையின் பெயர் போலார் பேர் (Polar Bear). ஐபாகோ (Ibaco) போன்ற ஐஸ் கிரிம் வகைகளில் இருந்து இவர்களது சற்று வித்தியாசமாக இருந்தது. நன்றாக இருந்தது, ஆனால் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

Kulfi Kaapi
Kulfi Kaapi

நான் வாங்கிச் சாப்பிட்ட ஐஸ் கிரிமின் பெயர்: குல்பி காப்பி (Kulfi Kaapi). பொதுவாகக் காப்பி சுவையில் ஐஸ் கிரிம்கள் இருக்கும், ஆனால் குல்பியில் நான் பார்த்ததில்லை. அதனால் முயன்று பார்த்தேன். கடாய் போன்ற பிடி வைத்த பாத்திரத்தில் கீழே குல்பி, அதற்கு மேல் கிரிம் (Cream), அதற்கு மேலாக வெண்ணிலா ஐஸ் கிரிம். இதோடு அடர்த்தியான காப்பி கிரிம் கொடுக்கிறார்கள், அதை நமக்கு வேண்டிய அளவு கொட்டிச் சாப்பிட வேண்டும். சுவையாக இருந்தது.

போலார் பேர் நிறுவனம் சென்னையில் பல இடங்களில் இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கவும்.

The ice cream varities we had at Polar Bear, Adyar, Chennai
The ice cream varities we had at Polar Bear, Adyar, Chennai

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading