நேற்று ஓபன்ஏஐ அவர்களது புத்தம் புதிய செய்யறிவு மாதிரியான ஜிபிடி 6 அஸ்திராவை வெளியிட்டுள்ளார்கள். என்னைக் கவர்ந்தது அவர்கள் வெளியிட்ட அஸ்திராவைப் பற்றி விளக்கும் இரண்டு நிமிடக் காணொலி.
அதில் வருபவர்கள் கணினியோடு பேசுகிறார்கள், அவர்கள் சொல்ல சொல்ல அஸ்திரா நாம் அன்றாடம் பயன்படுத்தும் அதே செயலிகளை அதுவாகவே கையாண்டு வேலைகளை முடிக்கிறது. பேச்சைப் புரிந்து அதை மென்பொருள் கட்டளைகளாக மாற்றுவதில் புதுமை எதுவுமில்லை. ஆனால் இங்கே எவரின் கணினியும் மேஜையில் இல்லை, விசைப்பலகை இல்லை, மேஜையில் திரை இல்லை. சினிமாவைப் போல, எல்லோரும் சுவற்றில் தெரியும் பெரிய திரையில் வரும் படங்களைப் பார்த்து பேசுகிறார்கள், நடந்துக் கொண்டு பேசுகிறார்கள், வசதியாக சோபாவில் சாய்ந்துக் கொண்டு பேசுகிறார்கள்.
கடந்த நாற்பது வருடங்களாக கணினிக்காக நாம் குனிந்து வேலைப் பார்த்து, முதுகு வலியை, கழுத்து வலியை வரவழைத்துக் கொண்டோம். இனி அது தேவையில்லை. நம் அறையில் இருக்கும் இன்னொருவரோடு எப்படி பேசுவோமோ, சேர்ந்து வேலைச் செய்வோமோ அப்படி செய்யலாம் என்பதை ஓபன்ஏஐ உணர்த்தியுள்ளதாக எனக்குப் படுகிறது.
இன்று நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆளுக்கு இப்படி தனி அறை கொடுக்க முடியுமா என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் விரைவில் பல மேலாளர்கள் இப்படி வேலைச் செய்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

