இன்று காலை உணவிற்காக தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் சங்கீதா உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.
நான் ஆர்டர் செய்தது ஒரு மினி-டிபன். அதில் வந்தது ஓர் இட்லி, ஒரு சிறிய மசால் தோசை, பொங்கல், கேசரி, வடை, சாம்பார், சட்னி வகைகள்.
அதோடு அவர்களாகவே இலவசமாகக் கொடுத்தது, ஒரு கோப்பை கேப்பை (கேழ்வரகு) கூழ். கூழோடு சேர்த்துச் சாப்பிட நறுக்கிய வெங்காயமும் பச்சை மிளகாயும், அதோடு தொட்டுக் கொள்ள மாங்காய் இஞ்சி துவையல். சொர்க்கத்தில் வழங்கப்படும் காலை உணவில் இது நிச்சயம் இருக்கும் என நான் அடித்துச் சொல்வேன், அந்தளவு அற்புதமான சுவை.
எனக்கு வந்த சிற்றுண்டியை நகர்த்திவிட்டு, மேலும் இரண்டு கோப்பைகள் கூழைக் கேட்டு வாங்கிக் கேட்டுச் சாப்பிட்டேன்.
வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவித இயற்கை உணவை வழங்குகிறோம் என்றார் சிப்பந்தி. அடுத்த முறை சங்கீதா உணவகம் சென்றால் அந்த நாளின் சிறப்பு உணவு வகையைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


My earlier post on this restaurant, Sangeetha T Nagar, Chennai.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
