ஏ.ஐ. வளர்ச்சியினால் தொழில்நுட்பத்தைத் தாண்டி நிறுவனங்களில் இருக்கும் பணிகளும் அதன் தன்மையும் வேகமாக மாறிவருகிறது. ட்விட்டரின் நிறுவனரான ஜாக் டோர்சி (Jack Dorsey) இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் இனி நிறுவனங்களில் மூன்று விதமான வேலைகள் இருக்கும் என்கிறார், அவை என்ன?

இதைப் பற்றி நானும் நண்பர் ஷானும் இந்த சேப்பியன் ஜீனோ காணொலியில் பேசியிருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவு-அடிப்படையிலான நிறுவனங்களில் மூன்று வேறுபட்ட வகை ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள் என்கிறார் ஜாக் டோர்சி.

  1. தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் (Individual Contributors): தொழில்நுட்ப அல்லது தயாரிப்பு அமைப்புகளை உருவாக்கி இயக்கும் ஆழ்ந்த நிபுணர்கள் இவர்கள். செயற்கை நுண்ணறிவின் துணையுடன் செயல்படும் இவர்களின் தனிச்சிறப்பு என்பது, செய்யும் வேலையின் அளவை விட, இவர்களின் முடிவெடுக்கும் திறனையே பெருமளவு சார்ந்திருக்கும்.

  2. நேரடிப் பொறுப்பாளர்கள் (Directly Responsible Individuals): சிக்கல்களுக்கு முழுமையாகப் பொறுப்பேற்பவர்கள் இவர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய இலக்குகளுக்குத் திட்டவட்டமாகப் பொறுப்பேற்பதோடு, வாடிக்கையாளர்களுக்கான எதிர்காலத் திட்டங்களையும் இவர்களே வகுப்பார்கள்.

  3. செயல்படுத்துபவர்கள்-வழிகாட்டிகள் (Player-Coaches): நேரடியாகப் பணிகளைச் செய்து, அமைப்புகளை உருவாக்கிக் கொண்டே இருப்பவர்கள். அதோடு, மற்ற ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை மேலும் மேம்படுத்தும் பணியையும் செய்பவர்கள்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading