சீனாவின் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனம் டிசிஎல் (TCL). சில ஆண்டுகளாக இந்தியாவிலும் இவர்களது தொலைக்காட்சிப் பெட்டிகள் பிரபலமாகி வருகின்றன. கொரியா, ஜப்பான் நாட்டுத் தயாரிப்புகளை விடக் குறைந்த விலையில் இவர்களது 4K மற்றும் கூகுள் டிவிக்கள் கிடைக்கின்றன. தரத்திலும் ஓரளவு நன்றாகவே இருப்பதால் இவை அதிகமாக வாங்கப்படுகின்றன. ஓர் ஆண்டுக்கு முன்னர் நண்பர் ஒருவர் டிசிஎல் கூகுள் டிவி வாங்கியுள்ளார்; அதன் விலைக்கு அது நன்றாகவே இருப்பதாகச் சொல்கிறார்.

டிவி என்றாலே எனக்கு சோனி பிராவியோ (Sony Bravia) தான். அதற்கு முக்கிய காரணம் அதில் வெளிப்படும் அந்த ஆழமான கருப்பு நிறம் (Sharpest Blacks). அந்த அடர்த்தியானக் கருப்பு, திரையில் வரும் காட்சிகளுக்கு ஓர் உயிரோட்டத்தைக் கொடுக்கும். மற்ற டிவிகளுடன் ஒப்பிடும்போது சோனியின்

அந்தத் தரத்தை அடித்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமில்லாமல், சோனி டிவிகளில் ஒருமுறை முதலீடு செய்தால் பல ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் உழைக்கும்; அதன் நம்பகத்தன்மை அப்படி.

1982ஆம் ஆண்டு புது தில்லியில் ஆசியக் கோப்பை நடந்தபோது, நான் ஆரம்பப் பள்ளி மாணவன்; எங்கள் வீட்டில் முதல்முதலாக ஒரு சோனி கலர் டிவி வாங்கினார் என் அப்பா. அது அடுத்த பல ஆண்டுகள் உழைத்தது. அதன் பின்னர் நாங்கள் சோனியோடு அப்போது இந்தியாவில் கூட்டாக இருந்த அர்சோன் (Sony-Orson) டிவி வாங்கினோம்; அதுவும் நன்றாகவே இருந்தது. அதன் பிறகு நான் வாங்கிய டிவிக்களில் எனக்குப் பிடித்தவை சோனி மட்டுமே.

உலகப்புகழ் பெற்ற ஜப்பானின் சோனி நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பிரிவோடு, தங்களின் தொலைக்காட்சிப் பிரிவையும் இணைத்து டிசிஎல் (TCL) ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்குகிறது. இதனால் குறைந்த விலையில் தரமான பிராவியோ டிவிக்கள் இந்தியாவிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த மாதிரி ஓர் உலகத்தரத்திலான வாடிக்கையாளர் நிறுவனத்தை ஓர் இந்திய நிறுவனம் வாங்கும் காலம் விரைவில் வந்தால் நன்றாக இருக்கும்; ஆனால், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் இப்போதுதான் நம்மூரில் தொடங்கியுள்ளன.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading