மெட்ராஸ் பேப்பரின் பதிப்பாசிரியரும், என் நலன் விரும்பியும் ஆன திரு பா.ராகவன் என்னைப் பற்றி இன்று அவரின் வாட்ஸ்அப் ஓடையில் பகிர்ந்துள்ள குறிப்பு:

எழுதுவதில் ப்ரொபஷனலிசம் கடைப்பிடிப்பது எப்படி?

நியாயமாக இதையெல்லாம் பொதுவில் போடக்கூடாது. அதுவும் வரும் வார சரக்கு. நிச்சயமாகவே கூடாது. இருந்தாலும் இம்மனிதரின் செயல் நேர்த்தியைப் பொதுவில் எடுத்துக்காட்டினால் லட்சத்தில் ஒருவராவது திருந்தலாம், மாறலாம், தேறலாம் என்பதனால் செய்கிறேன். எழுத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் இந்நேர்த்தி கூடினால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.

முதலில் ஒரு கட்டுரைக்கான ஆதாரங்களை இணைக்கிறார்.

பிறகு தொகுத்தவற்றின் அடிப்படை எழுத்து வடிவம்.

அதன் பிறகு திருத்தி, செம்மைப்படுத்தி எழுதிய வடிவம்.

அதற்கும் பிறகு பத்திரிகை தேர்ந்தெடுத்துக்கொள்வதற்குத் தோதாக, உரிய புகைப்படங்கள்.

இன்றைய தேதியில் தொழில்நுட்பம் சார்ந்து எழுதுவதில் வெங்கட்டை விஞ்ச இன்னொருவரில்லை. அந்த இடத்தை அடைவதற்கு இந்த நேர்த்தி இருந்தால்தான் முடியும்.

மெட்ராஸ் பேப்பரில் வெங்கட் எழுதுவதைப் படிக்க இங்கே செல்க.

படித்ததிலிருந்து மகிழ்ச்சியாக உணர்கிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு பா.ரா.

இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது: நாம் செய்யும் வேலை, அது சிறிதோ பெரியதோ, அதைத் தொடர்ந்து ஒழுங்காக அக்கறையோடு செய்தால், நிச்சயம் அது கவனிக்கப்படும்.

Thiru Pa Raghavan's WhatsApp Channel
Thiru Pa Raghavan’s WhatsApp Channel


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “அக்கறையோடு செய்தால் அது கவனிக்கப்படும்”
  1. நாம் செய்யும் வேலை, அது சிறிதோ பெரியதோ, அதைத் தொடர்ந்து ஒழுங்காக அக்கறையோடு செய்தால். you will get a happiness and completion. keep rocking Vengi!

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading