டிஜிட்டல் ஜோதிடக் கிளி

மனிதர்களுக்குத் தங்களது எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் என்றுமே அதிக ஆர்வமுண்டு. வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தால், இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் ஆரூடம் சொல்பவர்கள், ஜோதிடர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் டாஸ் கணினிகள் வந்த புதிதில், தமிழ்நாட்டில் எல்லா அலுவலகங்களிலும் ஒரு செயலி திருட்டுத்தனமாகப் பிரபலமாக இருந்தது. நமது பிறந்த தேதி, நேரம், இடத்தைச் சொன்னால் அதற்கேற்ப ஜாதகத்தைக் கணினியே கணித்து, கட்டம் போட்டு, அச்சிட்டுக் கொடுத்துவிடும். நடிகர் விவேக்கின் சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம் ‘தண்ணீரில் கண்டம்’ நகைச்சுவை நினைவுக்கு வருகிறதா?

அதில் தொடங்கி, செல்பேசியிலும் ஜோதிடம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படி அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் ஜோதிடச் செயலிகளில் ஒன்று சாநீ (Chani). இதை உருவாக்கியவர்கள் பெண் ஜோதிட நிபுணரான சாநீ நிக்கோலஸ் (Chani Nicholas) மற்றும் அவரது மனைவி சோன்யா பாஸி (Sonya Passi). இவர்கள் தொடங்கிய இந்நிறுவனத்தின் குறிக்கொள் ‘ஜோதிடம் எல்லோருக்கும் எளிதாகச் சென்றடைய வேண்டும்’ என்பது. இந்தியாவில் பல ஜோதிடச் செயலிகள் பிரபலமாக இருந்தாலும், சாநீ நிறுவனத்தின் பயணத்திலிருந்து துளிர் தொழில் முனைவோர் கற்றுக் கொள்ளப் பல விஷயங்கள் இருக்கின்றன.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “டிஜிட்டல் ஜோதிடக் கிளி”
  1. Amazing sir Ji

    May Lord Uppiliappan bless you with health, wealth and prosperity
    And propel you to greater heights

    Ayushman bhava
    Yashasvi bhava

    vasudevan

    Chennai

  2. அன்பின் வெங்கடரங்கன் அவர்களுக்கு,

    ஆச்சரியம் தரும் , சுவாரசியமான தகவல்கள் ,இந்தக்கிளியினால்...

    இதில்‌ இருவரும் ஒரே பாலினத்தவர்.. திருமணம் புரிந்து , நிறுவனம் நடத்தி வெற்றியும் கண்டுவருகின்றனர்.

    மேலும் மேலும் நன்கு வளர்ந்து நாற்பது பேருக்கு பெரும் சலுகையும் தந்து வேலையில் அமர்த்தியுள்ளது பெரும் ஆச்சரியம்..

    அவர்களுக்கும் சோதிடம் பார்த்திருப்பார்களோ!!!..

    எப்படி இருந்தாலும் இச்செய்தி நல்லதொரு வரப்பிரசாதம் தான்.

    நல்ல உழைப்பு , மற்றும் நல்ல யோசனைகள் என்றுமே வெற்றி பெறும் என்பதற்கு இவர்கள் இருவருமே எடுத்துக்காட்டு தான்.

    கடின உழைப்பு தான் இவர்கள் கட்டங்களில் இருந்திருக்கும்..

    சாநீ பெயரும் ஊதியமும் புதிது…ஐடியாவும்!!

    கிளிகள்…..நல்லைவகளையே எடுத்துரைக்கட்டும்..

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading