A Giant Leap for an Indian Aboard the ISS

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றிருக்கும் இந்தியாவின் திரு சுபான்ஷு சுக்லாவிற்கு வாழ்த்துகள்.

இந்த சாதனையைப் பார்த்து “இந்தியாவிற்கு இதெல்லாம் தேவையா?”, “இதில் எந்தவித உள்நாட்டு தொழில்நுட்பமும் இல்லை” என்ற கேள்விகள் எழுவது சகஜம். ஆனால், அறிவியலிலும் முன்னேற்றத்திலும் முதல் அடியை எடுத்து வைக்கும் துணிச்சல்தான் முக்கியம். எதிர் வாதத்தையெல்லாம் புறம் தள்ளி, அவருக்கும் அவரின் குழுவினருக்கும், சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கும், இந்தியாவின் இஸ்ரோவிற்கும் வாழ்த்துகள்.

இதில் அவருக்கு கிடைக்கும் அனுபவம் கூடிய விரைவில் இந்தியாவின் சொந்த விண்வெளி ஆய்வுகளிலும் பயணங்களிலும் செல்லவிருக்கும் இந்திய வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நமக்கு முன்னர் செய்தவர்களிடம் இருந்து பார்த்து, கற்றுக் கொள்வதும் அறிவியல் அறிவு தான். முன்னோடிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு அதை எவ்வாறு நம் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கிறோம், எந்தளவு அதை வளர்க்கிறோம், எவ்வளவு குறைந்த செலவில் செய்கிறோம், மக்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக மாற்றுகிறோம் என்பதே இருக்கிறது நம் திறமை. அதை நம் இஸ்ரோ வல்லுநர்கள் சிறப்பாக செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திரு சுக்லாவைப் பார்த்து ஊந்தப்பட்டு குறைந்தது ஆயிரம் இளைஞர்கள் இந்தத் துறைக்கு வந்தால் அதுவே இந்த பயணத்தின் வெற்றி. இந்திய அரசு செலவு செய்த முதலீட்டின் மீதான வருவாயும் அதுவே.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தினுள் நுழையும் சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தினுள் நுழையும் சுபான்ஷு சுக்லா. Picture: Screenshot from YouTube/@NASA

மீண்டும் ஒரு முறை அவருக்கு வாழ்த்துகள்.

15 ஜூலை 2025

இந்திய விண்வெளி வீரர் திரு சுபான்ஷு சுக்லா மற்றும் அவரது குழுவினரின் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியதற்கு மகிழ்ச்சி. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இவரின் பயணம் ஒரு மைல் கல்லாக இருக்கும். வாழ்த்துகள்!

(Source: Axiom Space/ YouTube)
(Source: Axiom Space/ YouTube)

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “A Giant Leap for an Indian Aboard the ISS”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading