கதவைத் திற, காய்கறி வரட்டும்!

நீங்கள் இந்தியப் பெருநகரம் ஒன்றில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் பல நூறு வீடுகள் இருக்கின்றன. காலை எழுந்தவுடன் உங்கள் வீட்டில் பேசப்படும் முக்கியமான விசயம் இது மாதிரிதானே இருக்கும்? “நம் சமையல்காரம்மா ‘மேரி’, அடுத்த பிளாக் வீட்டுக்கு வேலைக்கு வந்துவிட்டாரா, வாட்ச்மேன் குமாரை போன் போட்டுக் கேளுங்கள். இல்லையென்றால் எல்லோருக்கும் காலை உணவு சோமாட்டோ ஆர்டர்தான்”. அது சமையல்காரர்களாக இருக்கலாம், வேலையாள்களாக இருக்கலாம், காய்கறி தள்ளுவண்டியாக இருக்கலாம், ஆனால் இப்படியான கணக்கில்லா அழைப்புகள் ஒவ்வொரு நாளும் காவலாளி குமாரைப் போன்றவர்களுக்கு வரும். உங்கள் குடியிருப்பில் “மை கேட்” (My Gate) செயலி நிறுவப்பட்டிருந்தால் இந்தச் சிரமம் இருக்காது.

அது என்ன “மை கேட்” என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் முப்பது பெருநகரங்களில் இருக்கும் 25,000 குடியிருப்புகளில் நீங்கள் வசிக்கவில்லை என்பது தெளிவு.

2004ஆம் ஆண்டு சுனாமி பேரிடர் போது, விஜய் அரிசெட்டி (Vijay Arisetty) இந்திய விமானப் படை விமானியாகத் தனது சிறப்பான சேவைக்காகப் பதக்கம் வாங்கியவர். விமானப்படைப் பணியின் போது இவரது குடும்பம் இராணுவ குடியிருப்பில் வசித்தது. அங்கே குழந்தைகள் எந்நேரம் வேண்டுமானாலும் தனியாகவே போய் வரலாம், விளையாடலாம். அதன் பிறகு வெளி உலகில் வீடு எடுத்து வாழும் பொழுது அத்தகைய பாதுகாப்பான சுழல் இல்லாததை உணர்ந்தார். அப்போது அவர் கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் வேலைச் செய்து கொண்டிருந்தார். 2014, 2015 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் துளிர்த்தொழில்கள் வரத் தொடங்கிய காலம் அது. கோல்ட்மேன் சாக்ஸில் தனது பெரிய பதவியை விட்டுவிட்டுக் குடியிருப்புகளில் எப்படிப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பதைச் சிந்திக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading