பத்து ஆண்டுகளுக்கு (2015 காலக்கட்டம்) முன்னர் மக்கள் பயணம் செய்யும் முறையை மாற்றி அமைத்தது ஊபர் செயலி. செல்பேசியை எடுத்து செயலியைத் தட்டினால் சில நிமிடங்களில் வாடகை கார் வரும், நாம் விரும்பிய இடத்தில் நம்மை இறக்கிவிடும். இந்த அமெரிக்க நிறுவனத்தோடு யாராலும் போட்டி போட முடியாது என்று நம்பப்பட்ட காலம் அது. அப்படியான ஊபரை, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து விரட்டிய சாதனையைச் செய்த நிறுவனம் கிராப் (Grab). இந்த அரிய வணிகப் பயணம் எப்படி நடந்தது என்பதைக் காணலாம்.
இன்றைக்குத் தென்கிழக்கு ஆசியாவின் எட்டு நாடுகளில் முன்னணிப் பயணச் செயலியாக இருக்கிறது கிராப். வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மியான்மார், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா ஆகியவை அந்த எட்டு நாடுகள். 750 நகரங்களில் கிராப் சேவை கிடைக்கிறது. 2025ஆம் ஆண்டில் கிராப் நிறுவனத்தின் வருமானம் சுமார் மூன்றரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் (முப்பதாயிரம் கோடி இந்திய ரூபாய்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இந்தளவு பெரிதாக வளர்ந்திருக்கும் இந்நிறுவனம், தொடங்கப்பட்டது 2012ஆம் ஆண்டு மலேசியாவில் “மை டேக்சி” (மலேய மொழியில் எனது டாக்ஸி) என்கிற பெயரில். தொடங்கியது “அந்தோணி தான்” (Antony Tan) மற்றும் “தான் ஹூயி லிங்” (Tan Hooi Ling).
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

