ஆயிரத்தெட்டு சாப்பாட்டுச் செயலிகள் வரலாம். ஆனால் வளர்ந்த நாடுகளிலும் ஒருவேளை உணவாவது எல்லா வீடுகளிலும் தினமும் சுடச்சுட சமைக்கப்படுகிறது. தினமும் சமைக்கும் போது ஒரு மாறுதலுக்காகப் புது வகையான பண்டங்களை விரும்புவது இயல்பு. அவற்றைச் சமைக்கச் சமையல் குறிப்புகள் முக்கியமாகின்றன. இதற்காகவே சமையல் குறித்த பல்லாயிரம் ஓடைகள் இன்றைக்கு இன்ஸ்டாகிராமிலும், யு-ட்யூப்பிலும் இருக்கின்றன. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே இதன் தேவையைச் சரியாகக் கணித்து அதற்காகவே உருவாக்கப்பட்ட செயலி “கிச்சன் ஸ்டோரிஸ்” (Kitchen Stories). இது வரை இரண்டு கோடிக்கும் அதிகமான முறை இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தனித்துவத்தை நிறுவக் கடினமான சமையல் துறையில் எப்படி இந்தச் செயலி வெற்றி பெற்றுள்ளது?

ஜெர்மனியின் மிடில் ரைன் பள்ளத்தாக்கு (Middle Rhine Valley) இயற்கையாகவே மிக அழகான பகுதி. மேலும் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக இங்கு கட்டப்பட்ட பல கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால் இந்தப் பகுதியே யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அறியப்படுகிறது. இத்தகைய கண்ணுக்கினிய ரைன் நதிக் கரையின் வாலண்டர் நகரில் அமைந்துள்ளது “ஓட்டோ பைஷீம்” (WHU Otto Beisheim) மேலாண்மைப் பள்ளி. இங்கே 2013இல் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் “மெங்டிங் காவ்” (Mengting Gao) மற்றும் “வெரீனா ஹியூபர்ட்ஸ்” (Verena Hubertz). மெங்டிங்க்கு நன்றாகச் சமைக்கத் தெரியும், சமையலில் வெரீனா கற்றுக்குட்டி. இந்த முரணைப் பற்றிப் பேசும் போது இருவருக்கும் தோன்றிய யோசனையின் விளைவு “கிச்சன் ஸ்டோரிஸ்” செயலி.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading