WhatsApp is available now for Apple iPad natively

ஐ-பேட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று முதல் மெட்டாவின் வாட்ஸ்-ஆப் செயலி ஐ-பேட் கருவிக்கும் கிடைக்கிறது.

ஐ-பேட் வைத்திருந்தால் இது வரை வாட்ஸ்-ஆப்பை வலையுலாவி மூலமாகவே பயன்படுத்த முடிந்தது. அப்படிச் செய்வது, சென்னை மெட்ரோ பணி நடக்கும் சாலைகளில் போவது போன்ற அனுபவமாக இருந்தது. மெதுவாகப் போகும், குண்டும் குழியுமாக இருக்கும், மாற்று கிடையாது என்பதால் அப்படியே தான் போக வேண்டும். ஆனால் இன்று முதல், மாநில முதல்வர் (எனக்கு ஏன் வம்பு? ஆளுநர், பிரதமர் என்பதையும் சேர்த்துப் படிக்கவும்) போகும் சாலைகள் எப்படித் தடங்கள் இல்லாமல் இருக்குமோ அது போன்ற அனுபவத்தைத் தரும்.

ஆப்பிளின் செயலி கடையில் (ஆப்-ஸ்டோர்) “WhatsApp” என்று தேடிப் பதிவிறக்கிக் கொள்ளவும். செய்யும் முன் தயாரிப்பாளரின் பெயர் “WhatsApp Inc.”, என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இன்றைக்குத் தான் இது வந்திருப்பதால், தேடிய போது எனக்குத் தெரியவில்லை. பின்னர் இணையத்தில் தேடி, நேரடி முகவரி எடுத்து அங்கே போய் கண்டு கொண்டேன் – முதல் கருத்தில் நேரடி முகவரியைக் கொடுத்துள்ளேன்.

பதிவிறக்கியவுடன், செயலியில் வரும் கோலக்குறியை (QR code) உங்கள் செல்பேசியில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியிலிருந்து வருடி இணைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: ஐ-பேட் வெளிவந்து பதினைந்து (2010) ஆண்டுகளுக்குப் பின்னர் இது நடந்துள்ளது. இதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் வாட்ஸ்-ஆப் முதன் முதலாக வெளியிடப்பட்டது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “WhatsApp is available now for Apple iPad natively”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading