ஐ-க்ளவுட் மூலம் வாட்ஸ்அப் தரவுகளை மீண்டும் பெறுவது எப்படி?

இன்று பெரும்பாலான செயலிகளின் தரவுகள் அந்தந்த நிறுவன மேகக் கணிமைகளில் தானாகவே சேமிக்கப்படுகிறது. கூடுதல் இடம் தேவைப்பட்டால் சந்தா செலுத்தினால் போதும். ஆனால் நம் வாழ்வில், குடும்பத்தில் அதி முக்கியமான செயலியாக இருக்கும் வாட்ஸ்-ஆப் இலவசமாக வழங்கப்படுவதால் அது மட்டும் வித்தியாசமாகச் செயல்படுகிறது. அதன் தரவுகளைச் சேமிக்க வேண்டியது நம் பொறுப்பு. உருவாக்கிய மேட்டா நிறுவனம் தரவுகளைப் பாதுகாக்காது – இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் மறையாக்கு முறை.

இது எதற்கு இப்போது? சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆன்ட்ராய்ட் செல்பேசியில் இருந்து ஐ-போனுக்கு வந்த போது, மூன்றாம் நிறுவனத்தின் செயலி ஒன்றைக் காசுக் கொடுத்து வாங்கி, கணினியில் நிறுவி ஏழு கடல் தாண்டி வாட்ஸ்-ஆப் தரவுகளைக் கொண்டு வந்தேன். எனது பயன்பாட்டு முறையில், வாட்ஸ்-ஆப்பில் எனக்கு வரும் படங்களோ, கோப்புகளோ முக்கியமானதாக இருந்தால் உடனே அதனை ட்ராப்-பாக்ஸ் அல்லது மைக்ரோசாப்ட் ஒன்-ட்ரைவ்வில் சேமித்துவிடுவேன். அதனால் அடுத்த முறை அதை வாட்ஸ்-ஆப்பில் இருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் முக்கியமான அரட்டைகளைத் தனியாகச் சேமிக்க முடியாது. ஒட்டு மொத்த வாட்ஸ்-ஆப் தரவுகளையும் சேமித்தால் தான் அரட்டைகள் சேமிக்கப்படும்.

ஓரிரு ஆண்டுக்கு ஒரு முறை எனது கணினியை, செல்பேசியை முழுவதும் அழித்து விட்டு, மீண்டும் செயலிகளை நிறுவி தரவுகளைப் பதிவிறக்கிக் கொள்வேன். இப்படிச் செய்வதால் அதிகம் பயன்படுத்தாத செயலிகளை நீக்க முடியும், நம் தரவுகளும் வேறு இடத்தில் (மேகக் கணினி) சேமிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். அப்படி நேற்று செய்யும் போது, ஐ-போனை அழித்து, மற்றதை எல்லாம் நிறுவி வாட்ஸ்-ஆப் செயலிக்கு வந்த போது எனது பழைய தரவுகள் எதுவுமே வரவில்லை. இது ஆப்பிளின் ஐ-க்ளவுட் பிரச்சனை என்று புரிந்தது. இன்று இருக்கும் மேகக் கணிமை சேமிப்புகளில் ஐ-க்ளவுட் மிகவும் சுமாரானது, அதுவும் இந்தியாவில் மிக மிக மெதுவாக வேலை செய்யும். ஐ-க்ளவுட், ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பில், அவர்களின் கணினிகளில் வேறு தயாரிப்புகள் வேலைச் செய்யாது என்கிற கட்டுப்பாட்டில் ஏதோ வண்டி ஓடுகிறது.

எனது பிரச்சனைக்கு வருவோம். முதல் முறை நிறுவிய போது ஏற்கனவே சேமித்த அரட்டைகள் எதுவுமே புதிதாக வாட்ஸ்-ஆப் நிறுவியவுடன் தெரியவில்லை. அதனால் வாட்ஸ்-ஆப் செயலியை மீண்டும் நீக்கிவிட்டு. ஐ-போனை நிறுத்தி, மீண்டும் இயக்கி, அமைப்புகளில் ஐ-க்ளவுட் பக்கத்திற்குச் சென்று சேமித்த மொத்தத் தரவுகளும் பதிவிறங்கும் வரும் வரை காத்திருந்து, மீண்டும் வாட்ஸ்-ஆப் செயலியை நிறுவினேன். இப்போது வாட்ஸ்-ஆப் அரட்டைகள் அனைத்தும் தெரிந்தது. இதை உடனுக்குடன் செய்யாமல் புதிதாக வாட்ஸ்-ஆப்பை நிறுவிச் சென்றுவிட்டால் அதுவரை சேமித்த வாட்ஸ்-ஆப் தரவுகளை மீட்டெடுக்க முடியாது.

அதனால் தான் சொல்கிறேன் வாட்ஸ்-ஆப் செயலியில் அதி முக்கியமான விசயங்கள் வந்தால் வேறு இடத்தில் அவற்றை மட்டுமாவது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை உடனுக்குடன் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். நன்றி.

Whatsapp Chat Backup in iPhone
WhatsApp Chat Backup in iPhone

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading