அடுத்தவர் தான் நமக்குப் பரிசுக் கொடுக்க வேண்டுமா? நம்மை விட நம்மை விரும்புபவர்கள் யார்? நமக்குப் பிடித்தது என்னவென்று நம்மை தவிர வேறு யாருக்குச் சரியாகத் தெரியும். அதனால் நாமே நமக்குப் பரிசுக் கொடுத்துக் கொள்ளலாமா என்று சிந்தித்தேன். ‘விசு’வின் பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் பிடித்தால் என்கிற வசனம் மாதிரி போவதற்குள் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன். இந்தச் சிந்தனையின் விளைவாக எனக்கு நானே பரிசளித்துக் கொண்டது இந்த இரண்டு ‘தங்க’ கட்டிகள். எப்படி இருக்கிறது? கருத்தைப் பகிரவும்.
நிற்க.
படத்தைப் பார்த்து, ஒவ்வொரு கட்டியும் 1 கிலோ, இரண்டு கட்டி என்றால் சுமார் 130 இலட்சம் (ஒன்னேகால் கோடி) என்றெல்லாம் கணக்கு போட்டு வயிறு எரிய வேண்டாம். இரண்டும் சேர்த்து வெறும் 450 ரூபாய் தான், காடுகள் (அமேசான்) இணையத்தளத்தில் கிடைக்கும் காகிதங்கள் பறக்காமல் இருக்க உதவும் “எடைகள்” இவை, மேஜையில் கீறல் விழாமல் இருக்க அடியில் ரப்பர் கூட இருக்கிறது.
இரண்டு 'தங்க' கட்டிகள்

இரண்டு ‘தங்க’ கட்டிகள்


Discover more from Venkatarangan blog

Subscribe to get the latest posts to your email.

Tagged in: