2020இல் வாங்கியதால் இருந்து சில முறை தான் பயன்படுத்தியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து, இன்று தான் மீண்டும் மெட்டா நிறுவனத்தின் ஆகுலஸ் குயெஸ்ட் 2 (Oculus Quest 2) பயன்படுத்தினேன். எதற்காக என்றால்? சினிமாப் பார்க்கத் தான்.
மெட்டாவின் சமீபத்திய புதுப்பித்த மென்பொருள் பதிப்புக்குப் பிறகு, பயன்படுத்துவது முன்பைவிட எளிதாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. ஒரு முழுப் படத்தையும் பார்த்தேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!
நெட்பிளிக்ஸ் செயலியைக் கொண்டு, படத்தில் இருப்பது போன்ற ஒரு பனிமலை மரவீட்டில் சோபாவில் அமர்ந்து இருட்டான சூழலில் படம் பார்க்க நன்றாகவே இருந்தது. சமீபத்தில் அமேசானில் ரூபாய் நானூற்றுக்கு நான் வாங்கி மாட்டிய “Replacement Face Pad Mask” மிக வசதியாக இருந்தது; முன்பைவிட இப்போது மாட்டிக் கொண்டிருப்பது வசதியாகவும், வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தை முற்றிலும் தடுத்தது.
அப்படி என்ன படம் நெட்பிளிக்ஸில் பார்த்தேன்? லாபதா லேடீஸ் (2024).
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

