சென்ற வருடம் கோடையில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் –  கலகலப்பு (Masala Cafe). விமல் மற்றும் சிவா கதாநாயகர்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  உள்ளத்தை அள்ளித்தா போன்ற மறக்க முடியாத காமெடி படங்களைத் தந்த சுந்தர் சி தான் இந்தப் படத்தின் இயக்குனராம்!

நிறைய இடங்களில் யதார்தாம் இடிக்கிறது, ஆனால் காமெடி படத்திற்கு அதெல்லாம் எதற்கு என்று ஒதுக்கிவிட்டு பார்த்தால், படத்தைப் பார்க்கலாம், சிரிக்கலாம் – நான் சிரித்தேன். அதுவும் பாதிக்கு மேல் வரும் சந்தானம் தோன்றும் காட்சிகளில் நிஜமாகவே சிரிப்பு வருகிறது.

பாஸ் என்கிற பாஸ்கிரனுக்கு பிறகு இந்த  காமெடி படத்தின் கதையும் கோயில்களுக்கும்/டிகிரி காப்பிக்கும் பெயர் போன கும்பகோணத்தில் நடப்பதாக வருகிறது, அது என்ன காதல் என்றால் தமிழ் சினிமா ஊட்டிக்கும், காமெடிக்கு  கும்பகோணத்திற்கும் போகிறது?

Kalakalappu-masala-cafe

Categorized in:

Tagged in:

,